கெம்பேகெளடா சிலை: கர்நாடகாவில் ஆளும் பாஜக செய்யும் அரசியல் எடுபடுமா?

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

பெங்களூரு நகரை நிர்மாணித்த கெம்பேகெளடாவின் 108 அடி உயர வெண்கல சிலை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டிருக்கிறது. இந்த நகருக்கு வான் வழியாக வருவோரை வரவேற்கும் வகையில் இந்த சிலையை பெங்களூரு விமான நிலைய வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோதி திறந்து  வைத்திருக்கிறார்.

4,000 கிலோ எடை கொண்ட வாளுடன் சேர்ந்து இந்த சிலையின் மொத்த எடை 220 டன்கள் ஆகும்.

16ஆம் நூற்றாண்டின் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைவராக பெங்களூரு நகரை நிர்மாணித்த அவரது சிலை 511 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகா மக்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

கெம்பேகெளடாவின் சிற்பத்தை ராம் வி. சுதார் என்ற சிற்பி வடிவமைத்துள்ளார். இவர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்தவர்.

சிலை அரசியலில் ஆளும் பாஜக

அந்த முதுபெரும் தலைவரின் பாரம்பரியத்தை உரிய வகையில் அரசியல் ரீதியாக பலன்பெறத் தக்க வகையில் திறக்கும் நோக்கத்துடன் சர்தார் வல்லபபாய் படேலின் சிலை உருவாக்கப்பட்டதாகப் பார்க்கப்பட்டது. அந்த தலைவருக்கு உரிய மரியாதையோ பிரதமர் பதவியோ அளிக்கப்படவில்லை என ஆளும் பாஜக கூறி வந்தது.

கர்நாடகா மாநிலத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

ஒக்கலிகர் சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில் ஆளும் கட்சிக்கான செல்வாக்கு சரிந்து விடாமல் பாதுகாக்க அந்த சமூகத்தைச் சேர்ந்த கெம்பேகெளடாவின் சிலை திறக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

கெம்பேகெளுடா, முன்னேறிய சமூகத்தை சேரந்த ஒக்கலிகர் சமூகத்தில் இருந்து வந்தவர். இந்த சமூகத்தினர் தெற்கு கர்நாடகா அல்லது பழைய மைசூரு பிராந்தியத்தில் பெங்களூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், ஹாசான், சிக்கமக்களூரு, தும்கூரு மற்றும் கோலார் ஆகிய மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ளனர்.

அதே நேரத்தில் ஒக்கலிகர் சமூகத்தினர், இன்னொரு முன்னேறிய சமூகத்தினரான லிங்காய்த்துகளைப் போல மாநிலம் முழுவதும் பரவியிருக்கவில்லை.

லிங்காயத்துகள் வட கர்நாடகாவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் பரவலாகவும் உள்ளனர்.

பழைய மைசூரு பிராந்தியமானது காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுக்கு இடையேயான முதன்மையான களமாகவே இருக்கிறது.

ஒக்கலிகர் சமூகத்தின் சக்திவாய்ந்த தலைவராக முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவேகெளட உள்ளார்.

இந்த பிராந்தியத்தில் கடந்த முறை நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வசதியாக வென்றிருக்கலாம். எனினும், சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு எதிர்கட்சிகளின் கைகளில் இருந்தும் பாஜகவால் இந்தத் தொகுதிகளைக் கைப்பற்ற முடியவில்லை.

2019ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும், முதலமைச்சராக பதவியில் இருந்த எடியூரப்பா, 23 ஏக்கர் இடத்தில் ரூ.100 கோடி மதிப்பில் சிலையுடன் கூடிய தீம் பார்க் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

அயோத்தி நகரில் அமைக்கபடும் ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் செங்கற்கள் எடுத்து வரப்பட்டது போல, இந்த தீம் பார்க்குக்கு அக்டோபர் 21 ஆம் தேதி முதல் மாநிலத்தின் 31 மாவட்டங்களில் இருந்து மண் மற்றும் தண்ணீர்  கொண்டு வரப்பட்டுள்ளன.

யார் இந்த கெம்பேகெளடா?

ஆனால், யார் இந்த கெம்பேகெளடா, அவருடைய பாரம்பரியம் ஏன் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது?

கெம்பேகெளவுடா 2ஆவது விமான நிலைய டெர்மினல் தொடக்க விழாவுடன் சேர்ந்து பிரதமர் மோதி இதனை திறக்க வேண்டுமா?

கெம்பேகெளடா யெலஹங்காவில் பிறந்தவர். மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட தலைவராக இருந்தார். "இந்த விஜயநகரப்பேர ரசர், தனக்கு கற்கோட்டைகள் கட்ட வேண்டாம் என்றும், தங்களுக்கு யாரும் சவால் விடுவதை விரும்பவில்லை என்றும் கூறினார்.

எனவே இந்த முன்மொழிவுடன் தனது கோட்டையை உயர்ந்த இடத்துக்கு மாற்றினார். நீண்ட தூரத்துக்கு கண்காணிப்பு மேற்கொள்வதற்கு இது அவருக்கு உதவியது. தனக்காகவும், தனது மக்களுக்காகவும் முன்னெச்சரிக்கை செய்யும் முறையை அவர் உருவாக்கினார்," என  பிபிசி இந்தியிடம் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (என்ஐஏஎஸ்) அமைப்பின் பேராசிரியர் நரேந்தர் பாணி கூறினார்.

நகரத்தில் நான்கு கண்காணிப்பு கோபுரங்களை அவர் அமைத்தார். நகரின் வளர்ச்சியின் எல்லையை முன்கூட்டியே அறிந்து இதனை அமைத்திருக்கலாம் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த நான்கு கோபுரங்களும் இப்போது லால்பாக், கவி கங்காதரேஸ்வரா கோவில், MEG மையம் மற்றும் யெலஹங்கா கேட் என அழைக்கப்படும் இடங்களில் உள்ளன.

கோவில்களின் வளர்ச்சிக்கு அவர் ஊக்கம் அளித்திருக்கிறார். இப்போது பழைய நகரம் என்று அழைக்கப்படும் நகரின் இதய பகுதியில் சிறிய மற்றும் வினோதமான கோயில்கள் உள்ளன.

"இவற்றில் பெரும்பாலானவை திராவிட கட்டடக்கலையைக் கொண்டிருக்கின்றன. வெளிச்சுவர்களில், ராமாயணம் போல கதை சொல்லும் சிற்பங்களின் தொடர் வரிசையை நீங்கள் காணமுடியும். இவை விஜயநகர காலத்துக்கு உட்பட்ட கோயில்களில் உள்ளன. தேவனஹள்ளியில் (சர்வதேச விமானநிலையத்துக்கு அருகில்) உள்ள கோயில் தாழ்வாரம், விஜயநகர பாணியில் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதைக் காணலாம்," என வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் துணை இயக்குநர் எஸ்.கேஅருணி கூறுகிறார்.

"தன்னுடைய முடிவுகளால் என்னென்ன விளைவுகள் நேரிடும் என்றும், அந்த விளைவுகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் கூடிய மிகவும் நடைமுறை கண்ணோட்டத்தை அவர் கொண்டிருந்தார்.

எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு விஜயநகர பேர ரரசின் விதிமுறைகளை அவர் பின்பற்றினார். சொந்த நாணயத்தை அச்சடிக்கும் அளவுக்கான நியாயமான ஒரு எல்லை வரைக்கும் சென்றார்.

கிருஷ்ணதேவராயரால் கைது செய்யப்பட்டார். அதில் இருந்து வெளியே வருவதற்கான வழியையும் அவர் தெரிந்து வைத்திருந்தார்," என்றார் பேராசிரியர் பாணி.

நகர்புறங்களுக்கு வெளியே, பாசன நோக்கத்துக்காக பல குளங்களை கெம்பேகெளுடா கட்டமைத்தவர் என  அறியப்படுகிறது.

அப்படி அமைக்கப்பட்ட பாசனக்குளங்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து வரலாறு ஆசிரியர்களிடையே வலுவான தகவல்கள் இல்லை. அவர் பெங்களூருவை ஆட்சி செய்த காலத்துக்கும், அவை உருவாக்கப்பட்ட காலத்துக்கும் இடையே அவர்கள் மாறுபடுகின்றனர்.

1513 ஆம் ஆண்டு முதல் 1569 ஆம் ஆண்டு வரைஅவர் ஆண்டதற்கான சில ஆதாரங்கள் அடிப்படையில் டாக்டர் சூர்யநாத் காம்த் என்பவர், அவரது ஆட்சி குறித்து எழுதிய பிரபலமான விளக்கங்கள்  வெளியானது.

ஆனால், மேலும் ஆதாரங்கள் இருப்பது போல தோன்றியது. அவர் 1608ஆம் ஆண்டு வரை வாழ்ந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

"கெம்பேகெளடா பற்றிய பெரும்பாலான தகவல்கள், கல்வெட்டுகளை விட நாட்டுப்புறவியல் கதைகள் மூலமே தெரியவந்தது," என பிபிசி இந்தியிடம் பெங்களூர் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை முன்னாள் தலைவர் டாக்டர் ஜமுனா கூறினார்.

இதற்கிடையே மேலும் பேசிய ஜமுனா, "கடந்த சில தசாப்தங்களாக கெம்பேகெளடாவுக்கு  ஒரு சிறந்த போர் வீரர் என்ற பின்பம் கொடுக்கப்படுகிறது. திருப்பதியில் கெம்பேகெளடா, கிருஷ்ணதேவராயர் ஆகிய இருவருக்கும் வெண்கல சிலை அமைக்கப்பட்டதற்கு மாறாக இது இருக்கிறது.

எங்கள் துறையின் ஆண்டு நிகழ்வை ஒட்டி நாங்கள் கெம்பேகெளடாவின் படத்தை பிரசுரித்துள்ளோம். இன்றைய நாட்களில் சிலைகளில் காணப்படுவது போல அவர் பெரிய மீசையுடன், கைகளில் வாள் மற்றும் கேடயம் ஆகியவற்றை கொண்டிருக்கவில்லை. அவர் போர்களில் ஈடுபட்டார் ஆனால் பாலேகர்களிடையே அமைதியை ஏற்படுத்த உழைத்த ராஜதந்திரியாக அறியப்பட்டார்," என்கிறார்.

இந்த பொருளில், நம்மிடம் பெயர் வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் பேசிய இன்னொரு வரலாற்று ஆய்வாளர், "போர் வீரனுக்கு உரிய உடைகள் கெம்பேகெளுடாவுக்கு தரப்பட்டுள்ளன.

ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) முன்பு அமைக்கப்பட்டுள்ள சிலையில், அவர் ஒரு சுரிதார்  அணிந்திருப்பது போல உள்ளது.

கடந்த 300 ஆண்டுகளாகத்தான் சுடிதார் அணியும் வழக்கம் இருக்கிறது அல்லது மொகலாயர்களின் காலம் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் இருந்ததுதான் இருக்கிறது," என்று குறிப்பிட்டார். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: