நடுவரின் தீர்ப்பால் முடிவு மாறியதா? - மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணமான திருப்புமுனை
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் பிரீமியர் லீக் தொடர் நேற்றைய தினம் ஒரு திரில்லர் பாணியில் நடந்து முடிந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அறிமுக பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.
நேற்றைய தினம் நடந்த பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. ஆனால் இந்தப் போட்டியின் முடிவைத் தாண்டியும் நடுவரின் ஒரு தீர்ப்பு பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.
பொதுவாக கிரிக்கெட் விதிகளின்படி, பந்து வீச்சாளர் வீசும் பந்து ஃபுல் டாஸாக பேட்டரின் இடுப்புக்கு மேல் சென்றால் அந்தப் பந்து நோ பாலாக அறிவிக்கப்படும்.ஆனால் இந்தக் குறிப்பிட்ட பந்தில் இரு வகையான விவாதங்கள் எழுந்தன. எனினும் நடுவரின் முடிவு குறித்து பலர் சமூக ஊடகங்களில் அதிருப்தி தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



