காணொளி: மூதாட்டியிடம் பைக்கில் வந்து தங்கச் சங்கிலி பறிப்பு
காணொளி: மூதாட்டியிடம் பைக்கில் வந்து தங்கச் சங்கிலி பறிப்பு
பிரசுரிக்கப்பட்டது
ஒரு மூதாட்டியின் கழுத்தில் இருந்து இரண்டு நபர்கள் தங்கச் சங்கிலியைப் பறித்துச் செல்லும் காட்சி இது.
தெலங்கானாவின் ஹனுமகோண்டா மாவட்டத்தில் காலை சுமார் 8:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த மூதாட்டி தனது பேரனுடன் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இந்த சம்பவம் குறித்து புகார் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, சிசிடிவி
காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



