You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம்.
உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.
பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், 'சீன கொரோனா திரிபு அத்தனை ஆபத்தானதா?, சர்ச்சையை கிளப்பிய ரஃபால் வாட்ச் விவகாரம், 28 தமிழர்களை ரயில்களை எண்ணச் செய்த கும்பல், மெஸ்ஸி உலகின் அசைக்க முடியாத கால்பந்து வீரனா?
விக்ரமும் பொன்னியின் செல்வனும் தமிழ் திரையுலகிற்கு செய்தது என்ன? என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
சீன கொரோனா திரிபு அத்தனை ஆபத்தானதா? BF.7 என்னவெல்லாம் செய்யும்?
வைரஸ் மாற்றமடையும் போதெல்லாம், அது ஒரு புதிய வகை (பரம்பரை) அல்லது துணை வகையை ஆரம்பித்து வைக்கிறது. BF.7 என்பது முன்பே வந்துள்ள BA.5.2.1.7 தான்.
இது ஒமிக்ரானின் துணை வகை BA.5-லிருந்து பிறழ்ந்து உருவானதாகும். விரிவாக அறிய லிங்கை க்ளிக் செய்யவும்.
'டீக்கடையில் பேசும்போது பில்லை வெளியிடுவேன்' - ஓயாத ரஃபால் வாட்ச் சர்ச்சை
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலையின் ரஃபால் கடிகாரம் குறித்த சர்ச்சை ஓய்வதாக இல்லை. மாநில அமைச்சர் சினிமா வசனம் மூலம் கிண்டலடிக்கிறார்; காங்கிரஸ் தலைவர் இதுதான் இப்போது பிரச்னையா என்கிறார்.
இந்த விவகாரத்தை வைத்தே 25 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறப் போவதாகச் சொல்கிறார் அண்ணாமலை. லிங்கை க்ளிக் செய்து முழுமையாக வாசிக்கவும்.
ரயில்வே வேலைவாய்ப்பு மோசடி: 28 தமிழர்களை ரயில்களை எண்ணச் செய்த கும்பல் - முழு விவரம்
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை சேர்ந்த 28 இளைஞர்களை ரயில்வேயில் வேலைக்கு பயிற்சி எனக் கூறி, ஒரு மாதமாக டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்களை எண்ண விட்டு ஏமாற்றிய சம்பவம் நடந்திருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுப்புசாமி (78), டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அதில் டெல்லி ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு பரிசோதகர்கள், ரயில் போக்குவரத்து உதவியாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேரிடம் இருந்து சுமார் ரூ.2.67 கோடி வரை பண மோசடி செய்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விவரமாக அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
மெஸ்ஸி: பிரான்சை வீழ்த்தி கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரனாக உருவெடுத்து விட்டாரா?
லியொனெல் மெஸ்ஸி. இன்று இந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்ப்பினும், மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி...
அவர் இந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்தது. கோப்பையை வென்றவுடன் ரசிகர்களுக்கு மீண்டுமோர் இன்ப அதிர்ச்சியையும் அவர் வழங்கினார்.
ஆம், உலக கோப்பை போட்டியோடு தான் ஓய்வுபெறப் போவதாக அறிவித்திருந்தவர், இப்போது இனி தொடர்ந்து அர்ஜென்டினாவுக்காக மேலும் சில போட்டிகளில் விளையாடப் போவதாக அறிவித்திருக்கிறார். முழுமையாக வாசிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
விக்ரமும் பொன்னியின் செல்வனும் தமிழ் திரையுலகிற்கு செய்தது என்ன?
வசூலில் சாதனை படைத்த விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில், 2022ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு ஓரளவுக்கு நல்ல ஆண்டாகவே அமைந்தது.
இந்தப் போக்கு தொடருமா? முழுமையாக அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்