You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பை: காரின் பின்புறத்தில் தொங்கிய மனித கை - மர்மத்தின் பின்னணி என்ன?
காரின் பின்பகுதியில் இருந்து ஒரு மனித கை வெளியே தொங்க, கார் ஒன்று மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சென்று கொண்டிருந்தது. இந்த காணொளியை எடுத்தவர் அது ஒரு மனித சடலம் என காணொளியில் கூறுகிறார்.
சமூக வலைதளத்தில் இந்த காணொளி தீயாய் பரவிய நிலையில் காவல்துறை விசாரணையில் இறங்கினர்.
காரின் பதிவு என்னை வைத்து காரின் உரிமையாளர் மற்றும் மேலும் மூன்று பேரை காவல்துறை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரில் இருந்தது சடலம் இல்லை என்றும் லேப்டாப் விற்பனைக்காக சில இளைஞர்கள் எடுத்த விளம்பர காணொளி இது என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்த கூடுதல் விவரங்கள் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு