மருதமலை அடிவாரத்தில் வெள்ளி வேல் திருட்டு - வெளியான சிசிடிவி காட்சி

காணொளிக் குறிப்பு, மருதமலை அடிவாரத்தில் வெள்ளி வேல் திருட்டு - வெளியான சிசிடிவி காட்சி
மருதமலை அடிவாரத்தில் வெள்ளி வேல் திருட்டு - வெளியான சிசிடிவி காட்சி
பிரசுரிக்கப்பட்டது

கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் வெள்ளி வேல் திருடப்படும் காட்சி இது.

கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருந்த நிலையில், 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் திருடுபோனதாக செய்திகள் வெளியாகின.

இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில், இந்த சம்பவம் கோயில் அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தியான மண்டபத்தில் நடந்துள்ளதாகவும் அந்த மண்டபம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது இல்லை எனவும் கோவை மண்டல இணை ஆணையர் பி.ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு