டெல்லியை உலுக்கிய போராட்டம் - 15 புகைப்படங்களில் முக்கிய தருணங்கள்

இதற்கிடையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தினர்

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

'நாடாளுமன்றம் நோக்கி பேரணி' அழைப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லி தெருக்களில் திரண்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர்.

இதற்கிடையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லி போலீசாரால் காவலில் எடுக்கப்பட்டனர்.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களின் முக்கிய தருணங்களையும், அவற்றைச் சுற்றிய பரபரப்பான நிகழ்வுகளையும் 15 புகைப்படங்கள் மூலம் பார்க்கலாம்.

டெல்லி போராட்ட களத்தில் இளம்பெண்ணை குண்டுகட்டாக தூக்கிச்செல்லும் போலிசார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி போராட்ட களத்தில் இளம்பெண்ணை குண்டுகட்டாக தூக்கிச்செல்லும் போலிசார்
நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் அவருக்கு உதவும் இளைஞர்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராட்டத்தின் போது மயக்கமடைந்த இளைஞர் ஒருவருக்கு மற்ற இளைஞர்கள் உதவி செய்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை களைத்தனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர்.
கண்ணீர் புகைக்குண்டு வீச ஆயத்தமாகி இருக்கும் டெல்லி காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கண்ணீர்ப் புகைக் குண்டை வீசத் தயாராக இருக்கும் பாதுகாப்பு படை வீரர்
போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகைக்குண்டுகளை பாய்ச்சும் டெல்லி காவல்துறையினர்

பட மூலாதாரம், Getty Images

டெல்லி போராட்டக்களத்தில் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் கலைந்து  செல்லும் போராட்டக்குழுவினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி போராட்டக்களத்தில் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து கலைந்து செல்லும் போராட்டக்காரர்கள்.
போராட்டக்களத்தில் இருந்த இளைஞர் ஒருவரை அப்புறப்படுத்தும் காவலரிடம் கைக்கூப்பி மன்றாடும் இளைஞர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராட்டக்களத்தில் இருந்த இளைஞர் ஒருவரை அப்புறப்படுத்தும் காவலரிடம் கைகூப்பி மன்றாடும் போராட்டக்காரர்
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மீது டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மீது டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
டெல்லி காவல்துறையால் நடத்தப்பட்ட தடியடியில் காயமடைந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி காவல்துறையால் நடத்தப்பட்ட தடியடியில் காயமடைந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே
டெல்லி போராட்டத்தின்போது காவல்துறை வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி போராட்டத்தின்போது காவல்துறை வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கும் காட்சி
டெல்லி போராட்டக்களத்தில் காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்களிடையே நடைபெற்ற மோதலில் அரசு வாகனம் உடைக்கப்பட்ட நிலையில் அதில் தடயங்களை சேகரிக்கும் தடயவியல் நிபுணர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராட்டத்தின் போது சேதமடைந்த அரசு வாகனத்தில் தடயங்களைச் சேகரிக்கும் தடயவியல் நிபுணர்கள்
போராட்டத்தின் போது சேதமடைந்த அரசு வாகனத்தில் தடயங்களைச் சேகரிக்கும் தடயவியல் நிபுணர்கள்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த சரத் பவார்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் இல்லம் முன்பு போராடிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி காவல்துறையால்  குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், INC

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு