உன்னி கிருஷ்ணன் - அனுராதா ஸ்ரீராம் இணைந்து பாடிய 5 பிரபல பாடல்கள்

இன்று பிறந்த நாள் காணும் பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்  மற்றும் அனுராதா ஸ்ரீராம்

பட மூலாதாரம், Insta/unnikrishnanpofficial and anuradhasriram.com

படக்குறிப்பு, இன்று பிறந்த நாள் காணும் பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் துள்ளல் இசை பாடல்கள் என்றால் 'குத்தகைக்கு' எடுத்துபோல தொடர்ச்சிய பாடி, ஹிட் கொடுத்து வந்தவர் எல்.ஆர்.ஈஸ்வரி. பிற்காலத்தில் அந்த இடத்திற்கு அனுராதாஸ்ரீராம் வந்தார். அவர் பாடிய துள்ளல் இசை பாடல்கள் பிரபலமாகின. எல்.ஆர்.ஈஸ்வரி போலவே மெலோடியிலும் தனிப்பாதை அமைத்து தனது தனித்துவ குரலால் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார் அனுராதா ஸ்ரீராம்.

சென்னையில் பிறந்தவர் அனுராதா ஸ்ரீராம். இவர் தாய் ரேணுகாதேவியும் ஒரு பின்னணி பாடகிதான். ஆறாவது வயதிலேயே இசைப் பயிற்சியைத் தொடங்கி கர்நாடக மற்றும் இந்துஸ்தானி செவ்விசை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். சென்னை பல்கலைக் கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டிலும் இரட்டைத் தங்கப் பதக்கம் வென்றவர்.

பல முன்னணி தென்னிந்திய இசையமைப்பாளர்களிடம் தென்னிந்திய மொழிகள் மற்றும் சில வட இந்திய மொழிகளில் 300க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்.

1996-ஆம் ஆண்டுக்கான சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது, 1999-ஆம் ஆண்டுக்கான சிறந்த பின்னணிப் பாடகிக்கான கர்நாடக மாநில விருது, 2004-ஆம் ஆண்டுக்கான சிறந்த பின்னணிப் பாடகிக்கான மேற்கு வங்க விருது, 2004-ஆம் ஆண்டுக்கான சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது, 2003-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற முதல் சர்வதேச தமிழ்த் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை பெற்றவர். தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

கணவருடன் இணைந்து 'பைவ் ஸ்டார்' படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்போது பல டிவி ஷோக்களில் இசைப்போட்டி நடுவராக இருக்கிறார். அவருக்கு ஜூலை 9-ம் தேதி பிறந்தநாள்.

அதே தினம்தான் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கும் இன்று பிறந்தநாள். இவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என்று பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

பக்தி இசையில் இவருக்கென்று தனியிடம் உண்டு. அனுராதாஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன் இணைந்து பாடிய பல பாடல்கள் காலத்தை கடந்து காதுகளில் சங்கீத மழை பொழிந்துகொண்டு இருக்கின்றன. அவ்வாறு இருவரும் இணைந்து பாடிய பாடல்களில் சில.

'மீனம்மா' - ஆசை

இன்று பிறந்த நாள் காணும் பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்  மற்றும் அனுராதா ஸ்ரீராம்

பட மூலாதாரம், Youtube/@apinternational

படக்குறிப்பு, மீனம்மா பாடலில் ஒரு காட்சி

வசந்த் இயக்கத்தில் அஜித், சுவலட்சுமி நடித்த ஆசை படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை தேவா இசையில் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் இணைந்து பாடினர்.

'மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்… உந்தன் ஞாபகமே…' என்று உன்னிகிருஷ்ணன் தொடங்க, 'அம்மம்மா… முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை…எல்லாம் ஒரு காவியமே…' என்று அடுத்து ஆரம்பிப்பார் அனுராதா ஸ்ரீராம்.

ஒரு பனிமலை பின்னணியில் இந்த பாடல் படமாக்கப்பட்டு இருக்கும். இருவரின் குரலை கேட்கும் போது நாமும் அந்த பனிமலையில் சில்லென்ற குளிரில் இருக்கிற உணர்வு வரும்.

'மீனம்மா… உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும்…தென்றல் காத்திருக்கு' என உன்னிகிருஷ்ணனும், 'அம்மம்மா… உன்னை காதலித்து புத்தி பேதலித்து…புஷ்பம் பூத்திருக்கு…' என அனுராதா ஸ்ரீராமும் பாடி முடிக்க, மனதில் ஒருவித பரவசம் ஏற்படும்.

'ஒரு பட்டுத்தாமரை முத்தம் கேட்குது' - (வான்மதி)

இன்று பிறந்த நாள் காணும் பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்  மற்றும் அனுராதா ஸ்ரீராம்

பட மூலாதாரம், YOUTUBE/@pyramidmusics

ஒரு நாளும் உன்னை மறவேனே

உறங்காது எந்தன் மனம்தானே

ஒரு நாளும் உன்னை மறவேனே என கோரசில் பாடல் தொடங்கும். ஒரு பட்டு தாமரை முத்தம் கேட்குது ஹொய்யா...என கிறங்க வைக்க ஆரம்பிப்பார் உன்னிகிருஷ்ணன்.

அடுத்து விரல் பட்டு பூவுடல் நித்தம் வேர்க்குது ஹொய்யா..என காதலை கசிய வைப்பார் அனுராதா ஸ்ரீராம்.

தேவா இசையில் வான்மதி படத்தில் உருவான இந்த பாடல் ஒரு பச்சைப்பசேல் என மலை பின்னணியில் எடுக்கப்பட்டு இருக்கும். அஜித்தும், ஸ்வாதியும் இவர்கள் குரலுக்கு ஏற்ப நடித்து இருப்பார்கள். வாலியின் இளளை ததும்பும் வரிகளும், இவர்களின் காந்தக்குரலும் மாயம் செய்து இருக்கும்.

'என்ன இது என்ன இது' - (ரோஜாவனம்)

பரத்வாஜ் இசையில் வைரமுத்து வரிகளில் உருவான காதல் படம் இது.

'என்ன இது என்ன இது…

என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே…' என அனுராதா ஸ்ரீராம் தொடங்க, 'என்ன இது என்ன இது…என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே…' என உன்னிகிருஷ்ணன் தொடர்வார்.

கார்த்திக், மாளவிகா ஜோடி நடித்திருப்பார்கள். வெளிநாட்டில் எடுத்த பாடல் காட்சியாக இருந்தாலும் இவர்கள் குரலில் ஒருவித கர்நாடிக் டச் இருக்கும்.

ஓ வெண்ணிலா (குஷி)

இன்று பிறந்த நாள் காணும் பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்  மற்றும் அனுராதா ஸ்ரீராம்

பட மூலாதாரம், Youtube/@apinternational

விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில், தேவா இசையமைப்பில் உருவான ரொமான்டிக் பாடல்.

விஜயும், ஜோதிகாவும் ஒரு காரில் பயணம் செய்யும்போது சிச்சுவேஷன் சாங்காக இந்த பாடல் ஒலிக்கும்.

ஆண் : ஓ வெண்ணிலா…

என் மேல் கோபம் ஏன்…

ஆகாயம் சேராமல்…

தனியே வாழ்வது…

ஏனோ ஏனோ ஏனோ…

ஆண் : ஓ காதலே…

பெண் : ஆஹா…

ஆண் : உன் போ் மௌனமா…

பெண் : ஆஹா…

ஆண்: நெஞ்சோடு பொய் சொல்லி…

நிமிடம் வளா்ப்பது சாியா..

சாியா சாியா… என தொடங்கி

அந்த கார் பயணம் முழுக்க இந்த பாடல் ஒலித்தாலும் போராடிக்காது . அந்த அளவுக்கு உன்னிகிருஷ்ணனும் அனுராதா ஶ்ரீராமும் தங்கள் குரலால் அந்த பாடலுக்கு உயிர் கொடுத்து இருப்பார்கள். இந்த பாடலையும் கொடுத்தவர் தேவா.

'ரோஜா பூந்தோட்டம்' (கண்ணுக்குள் நிலவு)

இன்று பிறந்த நாள் காணும் பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்  மற்றும் அனுராதா ஸ்ரீராம்

பட மூலாதாரம், YOUTUBE

கண்ணுக்குள் நிலவு படத்தில் இளையராஜா இசையில் இந்த கூட்டணி இணைந்து பாடிய ஹிட் பாடல் இது.

'ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…

பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…' என்ற பாடல் காலம் கடந்து நிற்கிறது.

விஜய், ஷாலினி நடித்த இந்த பாடலில் இளையராஜாவுக்கே உரிய மெலடி டச்சில் சிம்பிளாக ஆரம்பித்து, மெல்லமெல்ல நம்மை சொக்க வைப்பார் உன்னிகிருஷ்ணன்.

'பாடல் ஆரம்பித்து சற்றே நேரம் கழித்து காதலை நான் தந்தேன். வெட்கத்தை நீ தந்தாய்' என வருவார் அனுராதா ஸ்ரீராம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு