You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு அரசின் முடிவால் கலங்கும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்
தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட நிறுவனமான டேன்டீக்கு சொந்தமான 2152 ஏக்கர் தேயிலைத் தோட்ட நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கப் போவதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், “வெளியே போகச் சொன்னால் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும்,” என்று தமிழ்நாடு அரசின் முடிவால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கலங்குகின்றனர்.
ஒருபுறம் இது காட்டின் வளத்தைப் பெருக்க உதவுமா என்ற பார்வை இருந்தாலும், வேலையை இழக்கும் ஆயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்னை முக்கிய சவாலாக உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளும் தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
செய்தியாளர்: மோகன், பிபிசி தமிழுக்காக படத்தொகுப்பு & ஒளிப்பதிவு: கு. மதன் பிரசாத், பிபிசி தமிழுக்காக
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்