You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கன் மக்களின் ஓபியம் வயல்களை தாலிபன்கள் அழிப்பது ஏன்?
நீண்ட தாடியுடன் தோளில் AK-47 துப்பாக்கியை மாட்டிக்கொண்டு, கையில் பிரம்புடன் தோட்டத்தில் புகுந்து செடிகளை அழைக்கும் இவர்கள் யார்? ஏன் இப்படி செய்கிறார்கள்?
ஒரு சில நிமிடங்களில், இந்த சிறிய வயலில் இருந்த மொத்த செடிகளையும் அழித்துவிட்டு அடுத்த வயலை நோக்கி புறப்படும் இவர்கள், ஆஃப்கானிஸ்தானின் போதைப்பொருள் எதிர்ப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் இவ்வளவு ஆவேசமாக அடித்து அழிக்கும் இவை ஓபியம் செடிகள். தங்களது வழக்கமான ரோந்துப் பணியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஹெராயின் போதைப்பொருளுக்கான முக்கிய மூலப்பொருளாக விளங்கும் ஓபியம் செடிகள் வளர்ப்பதை ஏப்ரல் 2022-ல், தலிபான் அரசு தடை செய்தது. தடையை மீறும் எவருக்கும் அவர்களின் களம் அழிக்கப்பட்டு ஷரியா சட்டத்தின்படி தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்