வட கடலில் சரக்குக் கப்பல் மற்றும் எண்ணெய் டேங்கர் மோதி விபத்து - எப்படி நடந்தது?

காணொளிக் குறிப்பு, வட கடலில் இரு கப்பல்கள் மோதல் - கடும் தீ
வட கடலில் சரக்குக் கப்பல் மற்றும் எண்ணெய் டேங்கர் மோதி விபத்து - எப்படி நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

வட கடலில் ஒரு சரக்குக் கப்பல் எண்ணெய் டேங்கருடன் மோதியது.

அமெரிக்க நிறுவனமான க்ரோவ்லி, ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலின் ஆபரேட்டர் மற்றும் இணை உரிமையாளர் ஆகும். இந்த கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்றபோது, வட கடலில் சோலாங் கப்பலால் மோதி விபத்துக்கு உள்ளானதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃப்ளோரிடாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த விபத்தில் தீ பற்றி எரிந்தது மற்றும் ஜெட் எரிபொருள் கப்பலில் இருந்து வெளியானது. கப்பலில் பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலில் இருந்தவர்கள் அதனை விட்டு வெளியேறினர். தற்போது ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் கணக்கிடப்பட்டுள்ளனர்", என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு கப்பல்களில் இருந்து 36 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து செயலாளரிடம் பேசிய பிறகு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கிரஹாம் ஸ்டூவர்ட் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)