காணொளி: ராமர் கோவில் நன்கொடையில் முறைகேடா?
இந்த சம்பவம் ராமர் கோவில் மீது அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இந்த கோவில் அவப்பெயரைச் சந்தித்து வருகிறது.
நன்கொடைகள் அதற்காக ஒதுக்கப்பட்ட நோக்கத்திற்கே செலவிடப்பட வேண்டும். நன்கொடை என்பது யாரோ ஒருவர் வீட்டுக்கு எடுத்து சென்று தனிப்பட்ட ஆடம்பரங்களுக்காக பயன்படுத்துவதற்கல்ல. நன்கொடையின் நோக்கம் அது அல்ல.
மசூதி, தேவாலயம் அல்லது குருத்வாராவில் திருட்டு நடந்ததாக நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. மக்கள் 500 ஆண்டுகளாக காத்திருந்த இந்த கோவிலில் இது நிகழ்ந்துள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவில், இந்து பக்தர்களின் நம்பிக்கைக்குரிய முக்கிய மையமாக திகழ்கிறது.
தினமும் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான இந்து பக்தர்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த இங்கு வருகை தருகின்றனர். இந்து மதத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன.
அதில் ஒன்று, கோவிலுக்கு சென்று நன்கொடை அல்லது காணிக்கைகளை செலுத்துவது.
இந்த நன்கொடை அல்லது காணிக்கை சமூக நலனுக்காகவோ அல்லது கோவிலை விரிவுபடுத்துவதற்காகவோ பயன்படுத்தப்படும் என்பதே பொதுவான நம்பிக்கை. இருப்பினும், சமீப நாட்களாக, ராமர் கோவிலின் நன்கொடை மற்றும் காணிக்கை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது எப்படி தொடங்கியது? விசாரணை நிலை வரை இது சென்றது எப்படி? அயோத்தியின் சாமானிய மக்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



