You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் போருக்கு செல்லும் ரஷ்ய வீரர்கள் விந்தணுக்களை சேமிக்க ஆர்வம் (காணொளி)
ரஷ்ய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இகோர் ட்ரூனோவ், படை வீரர்கள் தங்களது விந்தணுக்களை இலவசமாக சேமித்து கொள்ளும் வசதியை வழங்க வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் மருத்துவ காப்பீட்டிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக யுக்ரேனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்காக அழைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் தங்களது விந்தணுக்களை பாதுகாக்க க்ளினிக்குகளை அணுகுகின்றனர் என தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள இகோர் ட்ரூனோவ், தனது சங்கமானது சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட அழைக்கப்பட்டுள்ள கணவர்கள் மற்றும் அவர்களது மனைவிகளின் சார்பாக விந்தணுக்களை இலவசமாக சேமிக்கும் வசதி வேண்டும் என அரசிடம் விண்ணப்பத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
விரிவான தகவல் இந்த காணொளியில்...
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்