காஸாவில் கல்வி கிடைக்காமல் தவிக்கும் 6.25 லட்சம் மாணவர்கள்
காஸாவில் போர் ஆரம்பித்து முதலாம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், கல்வியின்றி மாணவர்கள் தத்தளித்து வருகின்றனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காஸாவில் 70% பள்ளிகள் சேதமடைந்துள்ளன. மேலும் 6,25,000 மாணவர்கள் எந்தவிதமான கல்வி சேவையுமின்றி போர்ச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்தப் போர்ச் சூழல் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை வைத்து தாங்கள் வாழ்ந்த பகுதியில் விட்டுச் சென்ற புத்தகங்கள், நோட்டுகள் போன்றவற்றைத் தேடிச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக ஓரிடம் விட்டு மற்றோர் இடத்திற்கு நகரும் ஆசிரியர்கள் தங்களால் இயன்ற அளவு அங்குள்ள மாணவர்களுக்கு கல்வியைக் கற்றுக் கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



