BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.

நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில் இந்த வாரம், மோதி அரசு சறுக்கியது எங்கே? நாடாளுமன்ற தேர்தலில் காத்திருக்கும் 9 சவால்கள், எர்துவான்: சிறு வயதில் ரொட்டி விற்றவர் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர், மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?, அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிறாரா நடிகர் விஜய்? மாணவர்களை சந்திப்பதன் பின்னணி என்ன?, தோனி கரங்களில் 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பை - சி.எஸ்.கே. வெற்றியில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா? ஆகிய ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

மோதி அரசு சறுக்கியது எங்கே? நாடாளுமன்ற தேர்தலில் காத்திருக்கும் 9 சவால்கள்

2019, மே 30ஆம் தேதி இந்திய பிரதமராக நரேந்திர மோதி இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி செவ்வாய்க்கிழமை 9 ஆண்டுகளை ஆட்சிப்பொறுப்பில் நிறைவு செய்துள்ளது.

இதன் மூலம் நீண்ட நாட்கள் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சாராத பிரதமர் ஆகியுள்ளார் நரேந்திர மோதி.

இந்த 9 ஆண்டுகளில் அவர் பல சாதனைகள் படைத்திருந்தாலும் பல சறுக்கல்களையும் சந்தித்திருக்கிறார்.

முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

எர்துவான்: சிறு வயதில் ரொட்டி விற்றவர் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்

துருக்கியில் எளிய பின்னணியில் இருந்து வந்த ரசீப் தய்யீப் எர்துவான் கடந்த 20 ஆண்டுகளில் அந்நாட்டின் அசைக்க முடியாத அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார்.

நவீன துருக்கியின் தந்தையாக கருதப்படும் முஸ்தஃபா கெமல் அடாதுர்க்கிற்குப் பிறகு அந்நாட்டை மாற்றியமைத்த பெரும் தலைவராக அவர் திகழ்கிறார்.

முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட தாது வருஷப் பஞ்சத்தின்போது மதுரையைச் சேர்ந்த குஞ்சரத்தம்மாள் என்ற நடனக் கலைஞர் தனது சொத்துகளை விற்று மதுரை நகர மக்களுக்கு உணவளித்ததாக ஒரு கதை உலவுகிறது. அந்தக் கதை உண்மையா, கற்பனைப் படைப்பா?

முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிறாரா நடிகர் விஜய்? மாணவர்களை சந்திப்பதன் பின்னணி என்ன?

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் இப்போது, அப்போது எனும் பேச்சுகள் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், அவற்றின் செயல்பாடுகள் தற்போது வெளிப்படையாக நடக்கின்றன.

முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

தோனி கரங்களில் 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பை - சி.எஸ்.கே. வெற்றியில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இது மற்றுமொரு மகுடம் என கடந்துவிட முடியாது. அதற்கு காரணம் இருக்கிறது.

2007-ல் டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்ட தோனிக்கு முதல் ஐபிஎல் கோப்பை என்னவோ மூன்றாவது சீசனில் 2010-ல் தான் கிடைத்தது. அதுவே அதன் முதல் கோப்பை. கொண்டாடித் தீர்த்தது. அடுத்த ஆண்டே மீண்டும் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அணி கோப்பையை தக்க வைத்தது எனும் பெருமை சிஎஸ்கேவுக்கு கிடைத்தது. ஆகவே அதுவும் ஸ்பெஷல்.

விரிவாக அறிய லிங்கை க்ளிக் செய்யவும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: