You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், செந்தில் பாலாஜி விவகாரம்: அதிமுகவை புறந்தள்ளி தி.மு.க. VS பா.ஜ.க. என அரசியல் களம் மாறுகிறதா?, இலங்கை தமிழர்களுக்கு 'நரகத்தை காட்டிய' தீவு: 20 மாதங்களாக தப்பிக்க முடியாமல் தவிப்பது ஏன்?, அமிர்தசரஸ்: தினமும் 1 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கும் 'பட்டினி இல்லாத' நகரம், தொடங்கியது எல் நினோ: தமிழகத்தில் எத்தகைய பாதிப்புகளை இது ஏற்படுத்தக்கூடும்?, கோலி, ரோஹித்தை விட தோனி சிறந்த கேப்டனா? உண்மை என்ன? ஆகிய ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
செந்தில் பாலாஜி விவகாரம்: அதிமுகவை புறந்தள்ளி தி.மு.க. VS பா.ஜ.க. என அரசியல் களம் மாறுகிறதா?
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் விவகாரம் மிகத் தீவிரமான அரசியல் திருப்பத்தை எட்டியிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகூட இல்லாத நிலையில், விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த விவகாரம் யாருக்கு சாதகம்?
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
இலங்கை தமிழர்களுக்கு 'நரகத்தை காட்டிய' தீவு: 20 மாதங்களாக தப்பிக்க முடியாமல் தவிப்பது ஏன்?
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் சிக்கிய மீன்பிடிப் படகிலிருந்து மீட்கப்பட்ட டஜன் கணக்கான புலம்பெயர்ந்தோர், அந்தப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவில் மாதக்கணக்கில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அமிர்தசரஸ்: தினமும் 1 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கும் 'பட்டினி இல்லாத' நகரம்
சீக்கிய மதத்தின் இதயமாகக் கருதப்படும் வடஇந்திய நகரமான அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் பேருக்கு இலவச உணவு அளிக்கப்படுகிறது.
இருபது லட்சம் பேர் வசிக்கும் அமிர்தசரஸ், பல விஷயங்களுக்காக எல்லோராலும் புகழப்படும் நகரமாக விளங்குகிறது. சுவையான உணவு, வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகப்பழைய நகரம், மற்றும் காண்போரின் கண்களைக் கவரும் சீக்கிய மதத்தின் மிக முக்கிய வழிபாட்டுத் தலமான பொற்கோவில் என பல சிறப்புகள் உள்ளன.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
தொடங்கியது எல் நினோ: தமிழகத்தில் எத்தகைய பாதிப்புகளை இது ஏற்படுத்தக்கூடும்?
எல் நினோ ஏற்கனவே பூமியை பாதிக்கக் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கடந்த வியாழனன்று உறுதி செய்துள்ளது.
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றமாகும். பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
கோலி, ரோஹித்தை விட தோனி சிறந்த கேப்டனா? உண்மை என்ன?
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் 2 வார இடைவெளியில் நடந்து முடிந்திருக்கின்றன.
முதலாவதில், 41 வயதை எட்டிவிட்ட தோனி பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாம்பியனாக்கி சாதித்தார். மற்றொன்றில், ரோஹித் சர்மா ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டார்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்