BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம், @Udhaystalin

பிரசுரிக்கப்பட்டது

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் இந்த வாரம், 'அமைச்சர் உதயநிதிக்கு காத்திருக்கும் சவால்கள், குஜராத்தில் இந்துக்களின் வாக்குகளை கவர்ந்து எம்எல்ஏ ஆன முஸ்லிம், இந்தியாவை ரஷ்யா திடீரென அதிகம் புகழ என்ன காரணம்?, ராகிங்கை கண்டுபிடிக்க கல்லூரி மாணவியாக நடித்த 'அண்டர்கவர்' பெண் காவலர், மெஸ்ஸியின் மெர்சல் ஆட்டம் உலக கோப்பையை வெல்லக் கைகொடுக்குமா? என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

உதயநிதி ஸ்டாலின்: புதிய அமைச்சர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்னென்ன?

தமிழ்நாட்டின் புதிய அமைச்சராகியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், கட்சிக்குள் வலுவான நிலையில் இருந்தாலும் ஒரு அமைச்சராக அவர் தன்னை நிரூபித்தாக வேண்டும். அவர் முன்பாக இருக்கும் சவால்கள் என்னென்ன? விரிவாக அறிய லிங்கை க்ளிக் செய்யவும்.

குஜராத் தேர்தல்: இந்துக்களின் வாக்குகளை கவர்ந்து எம்எல்ஏ ஆன முஸ்லிம் - யார் இவர்?

நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.குஜராத்தின் ஒரே முஸ்லிம் எம்எல்ஏ இம்ரான் கேடாவாலா, ஆமதாபாத்தின் ஜமால்பூர் கடியா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் இந்த தொகுதி 'பாஜகவின் கோட்டை' எனக் கருதப்பட்டது. முழுமையாக படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இந்தியாவை ரஷ்யா திடீரென அதிகம் புகழ என்ன காரணம்?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா இயல்பிலேயே பன்முனை உலகில் முக்கியமான தூண் ஆக இருக்க விரும்புவது மட்டுமின்றி, அது பன்முனை உலக அமைப்பை உருவாக்குவதற்கான மையமாகவும் இருக்கிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் சமீபத்தில் கூறினார்.

இது குறித்து பேசிய லாவ்ரோவ், யுக்ரேனுக்கு எதிரான போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு நடுநிலையானது என்று கூறி அதன் வெளியுறவுக் கொள்கையையும் பாராட்டினார். விரிவாக படிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.

ராகிங்கை கண்டுபிடிக்க கல்லூரி மாணவியாக நடித்த 'அண்டர்கவர்' பெண் காவலர்

2008ஆம் ஆண்டில் நடிகர் அஜித் குமார் ஏகன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தின் இயக்குநர் மற்றும் இணை எழுத்தாளர் ராஜுசுந்தரம். அந்த படத்தில் சிபி-சிஐடி காவல் அதிகாரியான சிவா(அஜித்குமார்) ஒரு கும்பலை பிடிக்க கல்லூரி மாணவன் போர்வையில் கல்லூரியிலேயே சேருவார். அவருக்கு கல்லூரி முதல்வர் ஜெயராம் உதவுவார். அத்தகைய ஓர் சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. ஆனால், இங்கே கல்லூரி மாணவியாக நடித்திருப்பவர் ஒரு பெண் காவலர். முழுமையாக அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

மெஸ்ஸியின் மெர்சல் ஆட்டம் இறுதிப்போட்டியை வெல்லக் கைகொடுக்குமா?

மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கவுள்ள இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான பிரான்ஸ், தொடர் வெற்றியோடு சாதனை படைக்க வேண்டுமென்று, கிட்டத்தட்ட ஒரு டன் அளவுக்குக் கனமான அழுத்தம் அவர்கள் தலையில் உள்ளது. அதைவிட அதிகமான அழுத்தம் அர்ஜென்டினாவுக்கு உள்ளது. ஆம், 36 ஆண்டுகால கனவாயிற்றே! விரிவாக படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: