முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் பயணம் கைகொடுக்குமா?

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணத்தை மேற்காெண்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற பயணங்களுக்குப் பயன் இருக்கிறதா? தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும் வரும் 2024 ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புறப்பட்டுச் சென்றார்.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஏற்கெனவே சிங்கப்பூர் சென்றுவிட்ட நிலையில், தொழில் துறையின் மூத்த அதிகாரிகள் தற்போது உடன் சென்றுள்ளனர். இந்த பயணம் தமிழ்நாட்டுக்கு எதை கொண்டு வந்து சேர்க்கும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: