‘கரூர் சம்பவத்திற்கு திமுக அரசுதான் காரணம்’- எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, ‘கரூர் சம்பவத்திற்கு திமுக அரசு தான் காரணம்’- எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?
‘கரூர் சம்பவத்திற்கு திமுக அரசுதான் காரணம்’- எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விளக்கமளித்தார்.

ஆனால், தாங்கள் கேள்விகளை எழுப்புவதற்கு முன்பாகவே முதலமைச்சர் பதில் சொல்வதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். பிறகு, அ.தி.மு.க. வெளிநடப்புச் செய்தது.

வெளிநடப்புச் செய்த அ.தி.மு.கவினர் பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

"பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. கரூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சி கருத்தைத் தெரிவித்த பிறகு முதல்வர் பேசுவதுதான் சரியாக இருக்கும் என்றேன். ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் முதல்வரை அழைத்து பேச அனுமதித்தார். இது முக்கியப் பிரச்னை என்ற காரணத்தால், 41 பேர் உயிரிழந்த நிகழ்வு என்பதால் அமைதி காத்தோம். செப்டம்பர் 27-ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் மக்கள் சந்திப்புக்கூட்டத்தில் பேசியபோது, ஒரு செருப்பு வந்து விழுந்தது. அதைப் பற்றி அரசு கருத்து எதையும் சொல்லவில்லை. கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளித்திருந்தால் உயிர் பலிகளைத் தவிர்த்திருக்கலாம்.'' என எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு