You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒடிஷா ரயில் விபத்து எப்படி நடந்தது? - நேரில் பார்த்ததை விவரிக்கும் தமிழக பயணிகள்
288 உயிர்களை பலிவாங்கிய கோரமான ஒடிஷா ரயில் விபத்து, எப்படி நடந்தது? இந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து, சென்னை வந்தவர்கள் விவரிக்கும் கண்ணீர் காட்சிகள்.
ஒடிஷாவின் பாலசோருக்கு அருகில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் இடையே ஏற்பட்ட விபத்தில் 288 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த ரயிலில் பயணம் செய்த பலர் உயிர் பிழைத்து, விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர். விபத்து நேர்ந்த ரயிலில் சிக்கி, உயிர் பிழைத்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ரமேஷ், ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வருகிறார். தென்காசியில் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக இவர் தமிழ்நாடு திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நேரிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்