காணொளி: கும்கி உதவியுடன் ரோலக்ஸை பிடித்த வனத்துறை

காணொளிக் குறிப்பு, கும்கி உதவியுடன் ரோலெக்ஸை பிடித்த வனத்துறை
காணொளி: கும்கி உதவியுடன் ரோலக்ஸை பிடித்த வனத்துறை
பிரசுரிக்கப்பட்டது

கோவையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் யானைதான் இது.

கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் வனப் பகுதியில் ரோலக்ஸ் என்ற இந்த ஆண் யானை, வனத்தை விட்டு வெளியேறி விவசாய பயிரை சேதம் செய்ததோடு, பலரையும் தாக்கியது. எனவே, யானையை பிடிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணித்ததில் இரவு நேரங்களில் மட்டுமே இது வெளியே வந்தது தெரியவந்தது.

மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இந்நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் தொண்டாமுத்தூர் இச்சிக்குழி அருகே, கபில்தேவ், சின்னத்தம்பி, வசீம் மற்றும் பொம்மன் ஆகிய நான்கு கும்கி யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் -க்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் லாரியில் ஏற்றப்பட்ட ரோலக்ஸ் யானை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வரகளியார் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு