You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தெலங்கானாவில் மாணவிகள் நடத்தும் பள்ளி வங்கி - எப்படி இயங்குகிறது தெரியுமா?
தெலங்கானாவில் மாணவிகள் நடத்தும் பள்ளி வங்கி - எப்படி இயங்குகிறது தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
தெலங்கானாவின் ஜனகாமா மாவட்டத்தில் உள்ள சில்பூர் ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி மாணவிகள், இந்த வங்கியை நிர்வகிக்கின்றனர். மாணவர்களிடையே நிதி அறிவை வளர்ப்பது, பணத்தைச் சேமிப்பது மற்றும் வங்கிச் செயல்பாடுகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் இந்த வங்கி தொடங்கப்பட்டுள்ளதாக அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பள்ளி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்த பள்ளி தலைமையாசிரியர் லீலா, ஒரு மாதத்திற்குள்ளாகவே மாணவர்கள் 32 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளதாகக் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்