You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ரஷ்யா மீது மிகப்பெரிய அளவில் யுக்ரேன் தாக்குதல்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலை யுக்ரேன் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து வெளியான காணொளியில், மாஸ்கோவின் வான்பரப்பில் பெரிய கரும்புகை சூழ்ந்திருப்பதை காண முடிகிறது. அந்நகரில் உள்ள பல இலக்குகள் மீது சுமார் 200 ட்ரோன்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,000 ட்ரோன்கள் மற்றும் 4 யுக்ரேனின் குரூஸ் ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு ரோஸ்டோவ் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களை யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், ரஷ்யா இதற்கான ராஜீய ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் யுகரேன் தலைநகர் கீயவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஸெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா நடத்திய அந்தத் தாக்குதலில் வழிபாட்டுத் தலம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தப் போரை விரும்பவில்லை, எப்போதும் விரும்பியதும் இல்லை; ஆனால் யுகரேன் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றால் ரஷ்யா மீதும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு