காணொளி: அமெரிக்கா - இரான் போர் ஒப்பந்தம் கையெழுத்து

காணொளி: அமெரிக்கா - இரான் போர் ஒப்பந்தம் கையெழுத்து
பிரசுரிக்கப்பட்டது

மத்திய கிழக்கில் 3 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வந்த அமெரிக்கா - இரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டதாகவும், தற்போது அமலில் வந்துள்ளதாகவும், வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிரான்சின் வெர்சாய்ல்ஸ் அரண்மனையில் ஜி7 உச்சிமாநாட்டுக்குப் பிறகு நடைபெற்ற இரவு விருந்தில், டிரம்ப் ஆவணத்தில் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. மேலும், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் இதில் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் நிர்வாகம் "செயல்திறன் அடிப்படையிலானது" என்றும், இரான் தனது உறுதிமொழிகளை பின்பற்றினால் மட்டுமே பலன்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

"புரிந்துணர்வு ஒப்பந்தம்" என அழைக்கப்படும் இந்த 14 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு