ஜி20 மாநாட்டிற்கு மத்தியில் யுக்ரேன் தலைநகர் கீவில் தாக்குதல் நடத்திய ரஷ்யா

பட மூலாதாரம், OFFICE OF THE PRESIDENT OF UKRAINE
இந்தோனீசியாவில் ஜி20 மாநாட்டிற்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ள நிலையில், யுக்ரேன் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
மிகோலைவ், செர்னிவ், சபோரிசியா ஆகிய இடங்களில் ரஷ்யா தாக்குதல் தொடுத்துள்ளது.
ஜி20 மாநாட்டிற்காக இந்தோனீசியாவில் ஒன்றுகூடிய தலைவர்கள் யுக்ரேனில் நடைபெற்று வரும் போர் குறித்து தங்களின் கண்டனங்களை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
கீவில் தாக்குதல் நடத்திய பல ரஷ்ய ஏவுகணைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டன என கீவ் நகர மேயர் விடாலி க்லிச்ஷ்கோ தெரிவித்துள்ளார்.
மேலும் கீவில் வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட செர்னிவ் நகரின் மேயர் வ்யாசெஸ்லவ் சாயஸ், ஏவுகணை தாக்குதல் தொடர்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரத்தில் யுக்ரேனின் தெற்கு நகரமான கெர்சனிலிருந்து ரஷ்யப் படைகள் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டன. இது ரஷ்யப் படைகளுக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் ரஷ்ய படைகள் இம்மாதிரியாக தரை வழியில் பின் வாங்கலை சந்திக்கும்போது வான் வழியாக அதற்கு பதலடி கொடுத்து வருகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












