விசில் கலைஞரின் இசை ஒலி - விருதுகளை குவிக்கும் மகாராஷ்டிரா இளைஞர்

காணொளிக் குறிப்பு, விசில் கலைஞரின் இசை ஒலி - மகாராஷ்டிராவில் விருதுகளை குவிக்கும் இளைஞர்
விசில் கலைஞரின் இசை ஒலி - விருதுகளை குவிக்கும் மகாராஷ்டிரா இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது

பேலட் விசிலிங் என்றால் வாயின் மேல்பகுதியை நாக்கால் தொட்டுக்கொண்டு விசிலடிப்பது. இந்த முறையில் விசில் ஒலி எழுப்பி ரசிகர்களை ஈர்த்து வருகிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிகில் ராணே.

விசில் கலைஞர்

இந்த கலையில் பரிணமிக்கும் நிகில் ராணே, தொழில்முறையாக இசை ஆசிரியராகவும், அகில இந்திய வானொலியில் ரேடியோ ஜாக்கி ஆகவும் பணியாற்றுகிறார்.

"விசிலடிப்பது மோசமான நடத்தையாக நம் சமூகத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், அரிய மற்றும் கவனிக்கப்படாத கலையில் நான் ஈடுபடுகிறேன் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது" என்கிறார் இவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: