BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

இலங்கை
பிரசுரிக்கப்பட்டது

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம். கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.

நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில் இந்த வாரம், 'பிரபாகரன் பற்றி பழ.நெடுமாறன் அறிவிப்பு தமிழ்நாடு அரசியல் களத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?, அதானி-ஹிண்டன்பெர்க் அறிக்கை: அமித் ஷா பேட்டி, சிரியா நிலநடுக்கம்: தலை சாய்க்கவும் இடமில்லாமல் தவிக்கும் 4 ஆயிரம் குடும்பங்கள், சூரிய வெடிப்பு நடந்தது உண்மையா? அறிவியலாளரின் எளிய விளக்கம், ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் 'பாசிட்டிவ்' திருநங்கை என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

பிரபாகரன் பற்றி பழ.நெடுமாறன் அறிவிப்பு தமிழ்நாடு அரசியல் களத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் சொல்வது தமிழ்நாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அந்தத் தாக்கம் யாருக்கு சாதகமாக இருக்கும்? இந்தத் தருணத்தில் அந்த அறிவிப்பு வெளியானது ஏன்? விரிவாக அறிய லிங்கை க்ளிக் செய்யவும்.

அதானி-ஹிண்டன்பெர்க் அறிக்கை: அமித் ஷா பேட்டி - "மறைக்க ஒன்றுமில்லை, பயப்பட எதுவுமில்லை"

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த நேர்காணலில் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்துப் பேசியுள்ளார். ராகுல் காந்தியின் சமீபத்திய கருத்துகள், அதானி-ஹிண்டன்பர்க் சர்ச்சை, 2024 தேர்தல் போன்ற பல விஷயங்களில் அமித் ஷா தனது கருத்தைத் தெரிவித்தார். லிங்கை க்ளிக் செய்து முழுமையாக வாசிக்கவும்.

சிரியா நிலநடுக்கம்: தலை சாய்க்கவும் இடமில்லாமல் தவிக்கும் 4 ஆயிரம் குடும்பங்கள்

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

உள்நாட்டுப் போரால் ஏற்கெனவே சீரழிவை சந்தித்துவருகிற சிரியாவின் ஜிண்டாய்ரிஸ் நகரில் 70 சதவீதம் கட்டுமானங்கள் தற்போது நடந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போயுள்ளன; சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் தலைசாய்க்கவும் இடமில்லாமல் தவித்து வருகின்றன. விரிவாக படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

சூரிய வெடிப்பு நடந்தது உண்மையா? அறிவியலாளரின் எளிய விளக்கம்

சில தினங்களுக்கு முன்பு சூரியனின் ஒரு துண்டு வெடித்து சிதறிவிட்டது என்றும் அது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மூலம் அது தெரியவந்தது என்றும் செய்திகள் வெளிவந்தன. அதேபோல சூரிய வெடிப்பு, சூரிய காற்று என்ற சொற்றொடர்களும் அந்த செய்திகளில் இடம் பெற்றிருந்தன. லிங்கை க்ளிக் செய்து முழுமையாக அறியவும்.

ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் 'பாசிட்டிவ்' திருநங்கை

இந்தியா

பட மூலாதாரம், NOORI SALEEM

"எல்லோரும் படித்து பட்டம் வாங்குவார்கள். ஆனால் எயிட்ஸ் என நான்கெழுத்து பட்டம் வாங்கிய போது வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்று கூட தோன்றியது. ஆனால், துணிந்து நின்றேன். இன்று என்னால் பல பேர் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்" கண்களில் உறுதியோடு கூறுகிறார் டாக்டர் நூரி சலீம். முழு விபரம் அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: