You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கானிஸ்தான்: தாலிபன்களை பாடல்கள், கவிதைகள் மூலம் எதிர்க்கும் பெண்கள்
வெளிநாடுகளில் வசிக்கும் ஆப்கன் பெண்கள் தாலிபன் சட்டத்துக்கு எதிராகப் பாடல்கள், கவிதைகள் மூலமாகத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
தாலிபன்களின் ஒழுக்கநெறி சட்டத்திற்கு அதன் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அந்தச் சட்டம் பெண்கள் பொதுவெளியில் சத்தமாகப் பேசுவதைத் தடை செய்கிறது. மேலும் அவர்கள் வெளியில் இருக்கும்போது தங்களது முகத்தையும், உடலையும் முழுதாக மூட உத்தரவிடுகிறது.
இச்சட்டத்தை அமல்படுத்த நியமிக்கப்பட்டிருக்கும் ஒழுக்கக் காவலர்களுக்கு மக்களைத் தடுத்து வைக்கவும், அபராதம் விதிக்கவும் அதிகாரம் உண்டு.
இந்தப் புதிய ஒழிக்கநெறிச் சட்டம் ஆண்கள், மற்றும் ஊடகம் மீதும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும், ஊடகங்கள் ஷரியா சட்டத்துக்கு எதிராகப் பேச முடியாது.
இந்தச் சட்டம் மனித உரிமைக்கு எதிரானது எனக் கூறி, இதை ரத்து செய்ய ஐ.நா வலியுறுத்துகிறது. 2021ஆம் ஆண்டிலிருந்து, பெண்களின் படிப்பைத் தடை செய்வது உட்படப் பல விதிகளை தாலிபன் அரசு ஏற்கெனவே விதித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)