காணொளி: கடலில் தரையிறங்கிய விமானம் 30 விநாடிகளில் மீட்கப்பட்டது எப்படி?

காணொளிக் குறிப்பு, கடலில் தரையிறங்கிய விமானம் 30 விநாடிகளில் விமானி மீட்பு
காணொளி: கடலில் தரையிறங்கிய விமானம் 30 விநாடிகளில் மீட்கப்பட்டது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் உள்ள வட கரோலினாவின் ஓக் ஐலண்ட் பியர் கடற்கரை அருகே, அவசரமாக கடலில் விமானத்தைத் தரையிறக்கிய விமானி மீட்கப்பட்ட தருணம் இது.

எஞ்சின் பழுதடைந்ததால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமானி கூறினார்.

வேறு ஒரு அவசர அழைப்புக்காக அப்பகுதிக்கு வந்திருந்த மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து 30 விநாடிகளுக்குள் விமானத்தில் இருந்த விமானியை மீட்டனர்.

ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தங்களின் விசாரணையை முடித்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்த மீட்பு காட்சி வெளியிடப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு