குஜராத்தில் விவசாய நிலத்தை அழித்து ஒலிம்பிக் மைதானமா? வலுக்கும் எதிர்ப்பு

குஜராத்தில் விவசாய நிலத்தை அழித்து ஒலிம்பிக் மைதானமா? வலுக்கும் எதிர்ப்பு
பிரசுரிக்கப்பட்டது

விவசாய நிலங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த விளையாட்டு மைதானம் சில காலம் கழித்து ஒலிம்பிக் விளையாட்டு மைதானமாக மாறலாம்.

இது, குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள கோதாவி (Godhavi) கிராமமாகும். 2036 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாநில அரசு இங்கு தொடங்கியுள்ளது.

2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய அரசு முன்மொழிந்துள்ளது.

இதற்காக, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் மேம்பாட்டிற்கான மாஸ்டர் பிளான் ஒன்றையும் மாநில அரசு தயாரித்துள்ளது.

ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்த தயாராகிவரும் எந்த நாடும் ஒலிம்பிக்ஸ் 2020 செயல் திட்டங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ஒலிம்பிக்ஸ் 2020 செயல்திட்டத்தின் படி, ஒலிம்பிக்கை நடத்த விரும்பும் ஒரு நாடு உள்கட்டமைப்பிற்காக முடிந்தவரை குறைவாக செலவழிக்க வேண்டும் என்பது முக்கியம்.

இங்கு புதிய மைதானங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மைதானத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோதாவி கிராமத்தில் விளையாட்டு நகரம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2036 ஒலிம்பிக்ஸை ஆமதாபாத்தில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றிபெறுவதைப் பொறுத்து இந்த அனைத்து உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கும் எவ்வளவு தொகை செலவிடப்படும் என்பது தெரியவரும்.

தற்போது அரசுக்கு எதிராக விவசாயிகள் பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த திட்டத்திற்காக தங்களின் நிலம் அரசால் எடுத்துக்கொள்ளப்படுமோ என அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் அச்சப்படுவது ஏன்?

விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)