You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வந்தவாசி பஞ்சமி நில சர்ச்சை: ட்ரோன் மூலம் பயிர்களை அழித்த சம்பவத்தில் என்ன நடந்தது?
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் அமைந்துள்ளது அருங்குணம் ஊராட்சி. இயற்கை எழில் கொஞ்சும் இந்தக் கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இந்தப் பகுதியில் பட்டியல் சாதியைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்களுக்கு அடுத்தபடியாக மாற்று சாதியினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள நிலங்களில் பெருமளவு மாற்று சாதியினர் கைகளில் உள்ளதாக பட்டியல் சாதி மக்கள் கூறுகின்றனர்.
தங்கள் முன்னோர்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலத்தில் பயிர் செய்ததற்காக ட்ரோன் மூலம் அவற்றை மாற்று சாதியினர் அழித்ததாக பட்டியல் சாதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உள்ளூர் பட்டியல் சாதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)