சட்டப்பேரவைக்கு பள்ளி சீருடையில் சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டப்பேரவைக்கு பள்ளி சீருடையில் சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள்
பிரசுரிக்கப்பட்டது
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்காததை கண்டித்து வித்தியாசமாக போராடிய திமுக
புதுச்சேரி அரசால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச சீருடை, கல்வி ஆண்டு முடிவடையும் தருவாயில் கூட இன்னும் வழங்கப்படவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி சட்டபேரவைக்கு பள்ளி மாணவர்கள் போல சீருடை அணிந்து, ஐ.டி. கார்டு, புத்தகப்பையுடன் வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர், ஆறு புதுச்சேரி மாநில திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.
முன்னதாக சட்டப்பேரவைக்கு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சைக்கிளில் பேரணியாக வந்தனர்.

பட மூலாதாரம், Twitter/PYDMKITwing
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



