You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரமலான்: 30 நாட்களுக்கு நோன்பு இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? - காணொளி
உலகம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் மார்ச், 11 மற்றும் 12 தேதிகளில் ரமலான் நோன்பு தொடங்கியிருக்கிறது.
ரமலான் பண்டிகையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை 30 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள்.
நீங்கள் ஒரு நாளில் கடடைசியாகச் சப்பிட்டதில் இருந்து, உங்கள் உடல் 'உண்ணாவிரத நிலைக்குச்' செல்ல எட்டு மணிநேரம் வரை ஆகும்.
இது உங்கள் குடல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி முடிக்கப் எடுத்துக்கொள்ளும் நேரம்.
இந்த நேரத்திற்குப் பிறகு, நமது உடல் ஆற்றலை வழங்க கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்பட்ட குளுக்கோஸை நாடுகின்றது.
பின்னர் உண்ணாவிரதத்தின்போது, குளுக்கோஸின் சேமிப்பு தீர்ந்துவிட்டால், நம் உடலில் உள்ள கொழுப்பு நம் உடலுக்கான சக்தியாக மாறும்.
இவ்வாறு 30 நாட்களுக்கு நோன்பு இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? அப்படி இருக்கும்போது உடலுக்குள் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் ? இந்த காணொளியில் பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)