தோனி வந்தால் இந்திய அணி கோப்பைகளை கைப்பற்றுமா?

பட மூலாதாரம், Getty Images
“கிரிக்கெட்டில் முடிவெடுக்கும் திறன் என்பது மிகவும் முக்கியமானது. தோனி மற்ற எல்லா கேப்டன்களையும் விட அதில் சிறந்தவர்” என்கிறார் இந்திய மகளிர் அணியில் ஆடி வரும் ஹேமலதா.
மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது டி20 உலகக் கோப்பையையும், 50 ஓவர் உலகக் கோப்பையைும் இந்திய அணி கைப்பற்றியது. கூடவே சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சாம்பியன் பட்டம் பெற்றது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி ஐசிசி தொடர்கள் எதிலும் கோப்பையைக் கைப்பற்றவில்லை. 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, இப்போது மீண்டும் ஒரு டி20 உலகக் கோப்பை என தொடர்ச்சியான தோல்விகளை இந்திய அணி சந்தித்து வருகிறது.
தோனிக்கு பிறகு நீண்ட கால கேப்டன்களாக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இருந்திருக்கிறார்கள். ஆயினும் கோப்பைகள் கிடைக்கவில்லை. தோனி போன்ற கேப்டன் இல்லாததே இந்திய அணி கோப்பைகளை வெல்ல முடியாமல் போவதற்குக் காரணம் என்ற விவாதங்களை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









