காணொளி: திமிங்கலங்களிடம் இருந்து தப்ப படகில் ஏறிய நீர்நாய்
காணொளி: திமிங்கலங்களிடம் இருந்து தப்ப படகில் ஏறிய நீர்நாய்
பிரசுரிக்கப்பட்டது
ஓர்க்கா திமிங்கலங்கள் நீர்நாயை வேட்டையாடுகின்றன அல்லது வேட்டையாட பயிற்சி எடுக்கின்றன.
"நாங்கள் திமிங்கலத்துக்கு அருகே சென்றபோது, அவை வேட்டையாட முயன்றதை பார்த்தோம். ஏனெனில், திமிங்கலங்கள் அதன் வால் பகுதியை நீரில் அடித்துக்கொண்டால், அவை வேட்டையாடுகிறது என்று பொருள்.
எனக்கு ஓர்க்கா திமிங்கலங்களைதான் பிடிக்கும். ஆனால், அந்த நீர்நாய் படகில் இருந்தபோது, அதை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே இருந்தது." என்கிறார், புகைப்பட கலைஞர் சார்வெட் ட்ருக்கர்.
ஓர்க்கா திமிங்கலங்கள் அப்பால் சென்ற பிறகே, நீர்நாய் மீண்டும் கடலுக்குள் சென்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



