அறிவியல் உலகின் மற்றுமொரு அதிசயம் - அந்தரத்தில் பறக்கும் இங்கிலாந்து மனிதர்கள்
அறிவியல் உலகின் மற்றுமொரு அதிசயம் - அந்தரத்தில் பறக்கும் இங்கிலாந்து மனிதர்கள்

பிரசுரிக்கப்பட்டது
அறிவியல் உலகின் மற்றுமொரு அதிசயமாக, மனிதர்கள் அந்தரத்தில் பறக்கும் வகையில் ஜெட்சூட் என்ற கருவி இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜெட்சூட்டை முதுகில் மாட்டிகொண்டு இயக்கும்போது, கீழ்நோக்கி அதிவேக காற்று வெளியாகிறது. அதன்மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக ஜெட்சூட் அணிந்திருக்கும் நபர் மேல்நோக்கி பறக்கிறார்.
இந்த கண்டுபிடிப்பை இங்கிலாந்தைச் சேர்ந்த கிராவிட்டி இண்டஸ்டிரீஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டால் சாதாரண மனிதர்களும் இனி உயரே பறக்க முடியும் என்று கூறுகிறார் அதன் நிறுவுனர் ரிச்சர்ட் பிரவுனி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



