BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.

கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.

பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், இந்த வாரம் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டுத் தப்பியது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய படங்கள், நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் திறந்த தேசிய சின்னம், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக தமிழ்நாடு முழுவதும் மோசடி, குஜராத் போலி ஐபிஎல் ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

நட்சத்திரங்களின் பிரசவ விடுதி

இதுவரை இல்லாத தெளிவோடும், ஆழத்தோடும் கூடிய ஒரு விண்வெளிப் படம் ஒன்றை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி திங்கள் கிழமை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

4.6 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருந்த உடுத்திரள் கூட்டத்தைக் காட்டும் இந்தப் படம் பின்னணியில் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பேரண்டத்தின் காட்சியையும் காட்டியது.

இந்நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த மேலும் சில வியப்பூட்டும் படங்களை நாசா செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அந்தப் படங்களின் சுவாரசிய விவரங்களை இங்கே படிக்கவும்.

சிங்கப்பூரில் கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து புதன்கிழமை அதிகாலையில் மாலத்தீவுக்கு தமது மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

முன்னதாக, அவரது விமான புறப்பாடு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தபோதும், அவர் மாலத்தீவில் இருந்து பயணம் செய்த விமானத்தின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் வேலை - தமிழ்நாடு முழுவதும் மோசடி

சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளியில் அஃபார்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்கிற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

இதைப் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் (ஐபிஎல்) போலியான பதிப்பை உருவாக்கி, ரஷ்யாவில் சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய ஒரு கும்பலை இந்தியாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த போலி ஆட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சத்துக்கும் மேல் (கிட்டத்தட்ட $4,000) அவர்கள் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

தேசிய சின்னத்தில் கோரைப்பல் சிங்கங்கள்

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மேலே இந்தியாவின் தேசிய சின்னமான நான்கு சிங்கங்கள் கொண்ட முத்திரையின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார்.

இந்த சிலையின் உயரம் 6.5 மீட்டர். வட்ட தட்டில் நான்கு சிங்கங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து நிற்பது போன்றான சிலை அது.

ஆனால் கி.மு. 250ம் ஆண்டை சேர்ந்த சிங்க முத்திரை தற்போது புதிய வடிவமைப்பில் சிலையாக அமைக்கப்பட்டுள்ளது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: