You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கே பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் ஈக்வடார் இடையேயான தொடக்க ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த முறை அனைவரின் பார்வையும் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதுதான் இருக்கும்.
அர்ஜென்டினா தனது ஆட்டத்தில் நவம்பர் 22 ஆம் தேதி சவுதி அரேபியாவையும், ரொனால்டோவின் போர்ச்சுகல் நவம்பர் 24 ஆம் தேதி கானாவையும் எதிர்கொள்கிறது.
இந்த முறை நடப்பு உலக சாம்பியனான பிரான்ஸ் தனது பட்டத்தை காப்பாற்ற கடுமையாக முயற்சிக்கும். இது தவிர, பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், கடைசி ரன்னர்-அப் குரோஷியா ஆகிய அணிகள் முக்கிய உலகக் கோப்பை கோப்பையை கைப்பற்ற வலுவான போட்டியாளர்களாக உள்ளன.
1978 அர்ஜென்டினா உலகக் கோப்பைக்குப் பிறகு இது மிகக் குறுகிய போட்டியாகும், அதாவது தொடக்கத்திலிருந்து முடியும் வரை 29 நாட்கள் (நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை).
கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் பிரபல இசைக்குழு BTS இன் நட்சத்திர பாடகர் ஜங் குக் தனது புதிய பாடலான 'ட்ரீமர்ஸ்' மூலம் தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்களை ஆட வைத்தார்.
இந்தப் பாடலுக்கு முன் உலகக் கோப்பைப் பாடல்கள் அனைத்தும் பாடப்பட்டன. தொடக்க விழா ஒளி மற்றும் இசையுடன் கோலாகலமாக இருந்தது. ஜங் குக் தனது ரசிகர்கள் மெய்மறக்க வைக்கும் வகையில் நடனமாடினார். ஜங் குக்கின் பாடலால், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து ட்வீட் செய்து வருகின்றனர்.
உலகக் கோப்பையுடன், இந்தியாவில் ட்விட்டரில் BTS பற்றி அதிகம் பேசப்படுகிறது. இது தவிர, பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேனும் தொடக்க விழாவில் பங்கேற்றார். அனைவரையும் இணைக்கும் நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை என்ற செய்தியைக் கொடுத்து மக்களின் இதயங்களை வென்றார் ஃப்ரீமேன்.
மேலும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் முதல் வரிசையில் ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
இந்த போட்டியை நடத்த கத்தார் ஏராளமான உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.
மைதானங்கள் மட்டுமின்றி, 100 புதிய ஓட்டல்கள் கட்டப்பட்டு, புதிய சாலைகள், மெட்ரோ ரயில் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மைதானங்கள் மற்றும் பயிற்சி மையங்களுக்கான பட்ஜெட் மட்டும் 5.3 பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.48,816 பில்லியன்).
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்