ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் உயிரிழப்பு

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

சனிக்கிழமை இரவு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில்லே பகுதியில் சைமண்ட்ஸ் பயணித்த கார் விபத்துக்குள்ளானது.

ஐசிசி வெளியிட்ட தகவலின்படி, சைமண்ட்ஸ் காரில் தனியாக பயணித்திருக்கிறார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் , அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தடயவியல் விபத்து பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 1998 ஆம் ஆண்டு, லாஹூரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதன்முறையாக ஒரு நாள் போட்டிகளில் விளையாட தொடங்கிய சைமண்ட்ஸ், இதுவரை ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி 5088 ரன்கள் குவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு, அவர் காலி நகரில் இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட தொடங்கினார். வலது கை பேட்ஸ்மேனான அவர், இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ரன்கள் எடுத்துள்ளார்.

சைமண்ட்ஸ் ஆஸ்திரேலிய அணியில் ஆஃப்-பிரேக் மற்றும் மீடியம் பேஸ் பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் சைமண்ட்ஸ் விளையாடி உள்ளார். குறிப்பாக, 2003 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி, 143 ரன்கள் குவித்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியாவுக்கு எதிராக விளையாடி ஆஸ்திரேலியா அணி உலகப் கோப்பையை வென்றது.

2008 ஆம் ஆண்டு, இந்தியா-ஆஸ்திரேலியா தொடரின் போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும், சைமண்ட்ஸும் களத்தில் மோதிக்கொண்டனர். அன்றிலிருந்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், சைமண்ட்ஸ் மிகவும் பிரபலம்.

களத்தில் அவரது சிறப்பான பீல்டிங் காரணமாக , ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க் போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்களுடன் சைமண்ட்ஸ் ஒப்பிடப்படுவார்.

இந்த ஆண்டில், கடந்த மார்ச் மாதம், ஆஸ்திரேலியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் மரணமடைந்தார். அதற்கு முன்னதாக, விக்கெட் கீப்பர் ராட் மார்ஷும் இறந்த நிலையில், தற்போது ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இறந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: