டி20 உலகக்கோப்பையில் கலக்கிய இந்திய பந்து வீச்சாளர்கள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Nathan Stirk/getty images

பிரசுரிக்கப்பட்டது

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்பின் தாஜ்மஹால் வருகையால் ஆக்ரா மிகவும் பேசப்பட்டது. ஆனால் தற்போது ஆக்ரா வேறு சில காரணங்களுக்காக பேசப்படுகிறது.

பூனம் யாதவ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஞாயிற்றுகிழமையன்று டி-20 உலகக்கோப்பை இறுதிபோட்டியில் விளையாட உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பவர்கள் இந்திய மகளிர் அணி பந்துவீச்சாளர்கள். இந்திய பந்து வீச்சாளார்களில் மிக முக்கியமானவர் பூனம் யாதவ்.

பூனம் இதுவரை 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை மேகனும் ,பூனம் யாதவும்தான் உலக கோப்பை டி-20யில் அதிகம் விக்கெட் எடுத்த வீராங்கனைகள். பூனம் யாதவின் கிரிக்கெட் பயணத்தை சற்று பின்நோக்கி பார்த்தால் தெரியும்.

மேகன்

பட மூலாதாரம், ICC/twitter

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன்

ஆக்ராவில் ஏக்லவ்யா மைதானத்தில் விளையாட வரும் வீரர்களில் ஒருவர் மட்டுமே லெக் ஸ்பின்னராக இருப்பார். அதுவும் அவர் ஒரு பெண் என்பது மிகவும் சிறப்பான விஷயம்.

பந்து வீச்சாளர்களில் ஆஃப் ஸ்பின்னர்கள் நிறைய பேர் இருப்பார்கள். லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர்கள் கூட இருப்பார்கள். ஆனால் லெக் ஸ்பின்னரைக் கண்டறிவது மிகவும் கடினம்.

அந்த பெண்தான் பூனம் யாதவ். இவருடைய பந்து வீச்சால்தான் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வங்கதேசத்துக்கு எதிராகவும் டி-20 உலகக்கோப்பை தொடரில் வெற்றிபெற காரணமாக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார் பூனம் யாதவ்.

லெக் ஸ்பின்னர்கள் பெண்களில் இருப்பதே மிகவும் கடினம். அதிலும் பூனம் தொடக்கத்திலிருந்தே தனியாக தெரிந்தார். பூனமின் உயரம் 4 அடி 11 அங்குலம் மட்டுமே. ஆனால் அவர் பந்து வீச வந்தால் நல்ல பேட்ஸ்மேன்கள் கூட திணறுவார்கள்.

இந்திய பந்துவீச்சாளர் பூனம் யாதவ்

பட மூலாதாரம், Icc/twitter

படக்குறிப்பு, இந்திய பந்துவீச்சாளர் பூனம் யாதவ்

1991ல் பிறந்த பூனம் யாதவ் , குடும்பத்துடன் கிராமத்திலிருந்து ஆக்ராவுக்கு வந்தபோது கிரிக்கெட்டின் மீதான ஈடுப்பாட்டை வளர்த்து கொண்டார். ஆனால் முதலில் அவருடைய குடும்பம் இதை ஏற்கவில்லை.

பூனமின் கடினமான உழைப்பாலும் ஈடுபாட்டினாலும் விரைவிலேயே அவர் உத்திரப்பிரதேச மாநிலத்துக்கு விளையாட்த் தொடங்கினார். 2013ல் முதல்முறையாக இந்திய அணிக்கு விளையாடினார் பூனம்.

கடந்த இரண்டு ஆண்டுகள் பூனம் யாதவுக்கு சிறப்பான ஆண்டுகளாக இருந்தது. 2018-19ன் சிறந்த பெண் கிரிக்கெட்டராக பிசிசிஐயால் தேர்வு செய்யப்பட்டார். அதே போல் 2017ல் நடந்த ஒரு நாள் போட்டியில் சிறந்த முறையில் கூக்லி பந்து போட்டார். அதன் பின் கூக்லி அவரின் தனி சிறப்பாக ஆனது.

பூனம் முதலில் ரயில்வே அணிக்காக விளையாடினார். அப்போது அங்கே கிளர்காக இருந்தார். ஆனால் இப்போது மேற்பார்வையாளராக இருக்கிறார்.

பூனம்

பட மூலாதாரம், Dan Mullan/getty Images

படக்குறிப்பு, பூனம்

தன்னுடைய உயரத்தையே பூனம் தனக்கான சாதகமாக மாற்றிக்கொண்டார். பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் போடுவதில் திறமை வாய்ந்தவர். அவ்வாரு அவர் போடும்போது பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியே வர இயலாது. இதனால் அவர் அடிக்கும்போது பந்து விக்கெட் கீப்பர் கைக்கு சென்றுவிடும். இப்படிதான் விக்கெட் எடுப்பார் பூனம்.

பூனத்துக்கு அர்ஜுனா விருது அளிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரட்தேசத்தை சேர்ந்த எந்த பெண் கிரிக்கெட் வீராங்கனையும் இதுவரை அர்ஜுனா விருது பெற்றதில்லை. ஒருநாள் போட்டி தர வரிசை பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார் பூனம் யாதவ். டி-20 போட்டிகளில் 92 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட் எடுத்த இந்திய வீராங்கனை என்னும் சிறப்பைப் பெற்றார் பூனம் யாதவ்.

தீப்தி ஷர்மா

பூனம் யாதவை போல தீப்தி ஷர்மாவும் இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர். கடந்த வருடம் நடந்த டி-20 தொடரின்போது தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் மூன்று ஓவர்களை மெய்டன் செய்தார். அவ்வாறு செய்த முதல் இந்திய பண்டு விச்சாளர் இவர்தான்.

தீப்தி ஷர்மா

பட மூலாதாரம், Mike Owen-ICC/getty Images

படக்குறிப்பு, தீப்தி ஷர்மா

டி-20 உலக பந்து வீச்சாளர் தர வரிசைப்பட்டியலிலும் ஒரு நாள் போட்டிக்கான ஆல் ரவுண்டர் தர வரிசைப்பட்டியலில்ம் நான்காம் இடத்தில் இருக்கிறார்.

2017ல் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 188 ரன்கள் எடுத்தார் தீப்தி ஷர்மா. அப்போது ஒருநாள் போட்டியில் பெண் வீரரால் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிக ரன் அதுவே ஆகும்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுடனான் முதல் போட்டியில் தீப்தி 46 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இது அணி 133 ரன்கள் எடுக்க காரணமாக அமைந்தது.

தீப்தியின் சகோதரர் அவருடைய திறமைக்கு தன்னுடைய வாய்ப்பை விட்டுவிட்டு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

ஷிகா பாண்டே

இந்தியாவின் மற்றுமொரு சிறந்த பவுலர் ஷிகா பாண்டே. இந்த டி-20 உலகக்கோப்பையில் ஏழு விக்கெட்டுகள் எடுத்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார் ஷிகா பாண்டே.

30 வயதான ஷிகா பாண்டே ஒரு ஸ்காட்ரென் தலைவர் ஆவார். இவர் இந்திய விமானப்படையில் இருந்தவர்.

ஷிகா பாண்டே

பட மூலாதாரம், Indian airforce/ twitter

படக்குறிப்பு, ஷிகா பாண்டே

ஷிகாவின் தந்தை கோவாவிலிருக்கும் கேந்திரிய வித்யாலயாவில் ஹிந்தி ஆசிரியர். சிறு வயதிலிருந்து கிரிக்கெட் மேல் ஆசைக் கொண்ட ஷிகா முதல் முதலில் கல்லூரியில் தோல் பந்தைக் கொண்டு கிரிக்கெட் விளையாண்டுள்ளார்.

அவருடைய தொடக்க்க்காலத்தில் அவர் அவ்வளவு வெற்றி பெறவில்லை. எனவே அவர் இந்திய விமானப் படையில் சேர்ந்து ஏர் ட்ராஃபிக் கட்டுப்பாட்டாளராக இருந்தார்.

2014ல் முதன் முறையாக அவர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். இந்த நடப்பு டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று முக்கிய விக்கெட்டுகளும், வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளர்கள் தங்கள் திறமையை இந்த டி-20 உலகக்கோப்பையில் நிரூபித்துள்ளனர்.

ராதா யாதவ்

ராதா யாதவ்

பட மூலாதாரம், Icc/twitter

படக்குறிப்பு, ராதா யாதவ்

19 வயதான ஸ்பின்னர் ராதா யாதவ் இந்த டி-20 உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நான்கு முக்கிய விக்கெட்டை எடுத்தார்.

ராதாவின் குழந்தைப்பருவம் ஏழ்மையிலே இருந்தது. மும்பையில் காந்திவலி என்னும் பகுதியில் 200-250 சதுர அடியில் அவரது வீடு இருக்கும். அப்படிபட்ட சூழலில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கி இன்று இந்திய அணியில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார் ராதா யாதவ்.

2000ஆம் ஆண்டு பிறந்தார் ராதா. அவருடைய தந்தை ஓம்பிரகாஷ் உத்திரபிரதேச மாநிலம் ஜவுன்பூரிலிருந்து வேலை தேடி மும்ம்பை வந்தார். அவர் பால் விற்றுகொண்டிருந்தார். ராதாவும் அவருடைய அப்பாவும் ஏழ்மையை ஒரு தடையாக கருதியதில்லை.

உலக கோப்பை

ஷஃபாலி யாதவ்

பட மூலாதாரம், Daniel Pockett/getty Images

படக்குறிப்பு, ஷஃபாலி யாதவ்

இந்தியா உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவில் நான்கு ஆட்டங்கள் ஆடியுள்ளது. இதுவரை நடந்த போட்டியில் திருப்புமுனையாக இருந்தது பந்து வீச்சாளர்கள் மட்டுமே.

ராஜேஸ்வரி காயக்வாட், 20 வயதுடைய வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்த்ரகார் மற்றும் 22 வயதான அருந்ததி ரெட்டி போன்ற இளம் வீரர்கள் மற்றும் அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் இந்தியாவை உலகக்கோப்பை இறுதிபோட்டிக்கு முன்னேற்றியுள்ளனர். ஆனால் பேட்ஸ்வுமனாக ஷஃபாலி யாதவ் மட்டுமே சிறப்பாக செய்ல்பட்டுள்ளார்.

இப்போது அனைவரும் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியைக் காண ஆவலுடன் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: