நியூசிலாந்து அணி 26 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் நிக்கல்ஸ் மற்றும் டெய்லர் களத்தில் உள்ளனர்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது இங்கிலாந்து அணி
உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்தும், நியூசிலாந்தும், முதல் முறையாக இந்தக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் கனவோடு களமிறங்குகின்றன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
71 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார் நிக்கல்ஸ்.
அவுட் ஆனார் கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் பலமாக பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் 30 ரன்களை எடுத்து ப்ளன்கெட் பந்து வீச்சில் அவுட் ஆனார்
22 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 102 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து நியூசிலாந்து அணி 63 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் கேன் வில்லியமன் 29 பந்துகளில் 9 ரன்களையும், நிக்கல்ஸ் 43 பந்துகளில் 27 ரன்களையும் எடுத்துள்ளனர்.
12 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 46 ரன்களை எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி ஒன்பது ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 31 ரன்களை எடுத்துள்ளது
அவுட் ஆனார் கப்டில்
இங்கிலாந்து அணியின் வோக்ஸ் வீசிய பந்தில் கப்டில் 19 ரன்களுக்கு அவுட் ஆனார்.
6.2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 29 ரன்களை எடுத்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டியை கண்டு வருகிறார்.
நான்காவது ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணி 22 ரன்களை எடுத்துள்ளது. இந்த ஓவரில் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரையும் விளாசியது அந்த அணி.
தப்பினார் நிக்கல்ஸ்
நியூசிலாந்து அணி மூன்று ஓவர்கள் முடிவில் 10 ரன்களை எடுத்துள்ளது. இந்த ஓவரில் நிக்கல்ஸ் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. பின் இங்கிலாந்து அணி கோரிய ரிவ்யூ அவருக்கு சாதகமாக அமைந்து அவர் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது.
இரண்டு ஓவர் முடிவுகளுக்கு நியூசிலாந்து அணி எட்டு ரன்களை எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கப்டில் மற்றும் நிக்கல்ஸ் களம் இறங்கியுள்ளனர். நியூசிலாந்து அணி முதல் ஓவரின் முடிவில் ஒயிட் மற்றும் ஒரு பவுண்டரி என மொத்தம் ஐந்து ரன்களை அடித்துள்ளது.
இங்கிலாந்து அணியில் இடம் பெறும் வீரர்கள்: ஜேசன் ராய், ஜானி பெர்ஸ்டவ், ஜோ ரூட், இயான் மார்கன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், லியம் ப்ளன்கெட், ஜோஃப்ரா ஆர்செர், அடில் ரஷித், மார்க் உட்.
நியூசிலாந்து அணியில் இடம் பெறும் வீரர்கள்: மார்டின் கப்டில், ஹென்றி நிக்கல்ஸ், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், டாம் லேதம், கோலி டே கிராண்ட் ஹோம், மிட்ஷெல் சாண்ட்நெர், ட்ரெண்ட் போல்ட், லாக்கி ஃபெர்கசன்
முன்னதாக இரவு பெய்த மழையின் காரணமாக போட்டி சிறிது நேரத்துக்கு ஒத்தி வைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
டாஸ் வென்ற கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.