You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது இங்கிலாந்து அணி

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்தும், நியூசிலாந்தும், முதல் முறையாக இந்தக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் கனவோடு களமிறங்குகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது இங்கிலாந்து அணி

    கிராண்ட்ஹோம் பந்து வீச்சில் 30 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார் ரூட்.

  2. இங்கிலாந்து அணி இலக்கை அடைய 5.4 ரன் விகிதம் தேவையாக உள்ள நிலையில் தற்போதைய ரன் விகிதம் 3.64ஆக உள்ளது.

  3. 15 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 56 ரன்களை எடுத்துள்ளது.

  4. 11 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 39 ரன்களை எடுத்துள்ளது.

  5. இதுவரை உலகக் கோப்பையை வென்றுள்ள நாடுகள் எவை எவை?

    1975 - மேற்கிந்திய தீவுகள்

    1979 - மேற்கிந்திய தீவுகள்

    1983 - இந்தியா

    1987 - ஆஸ்திரேலியா

    1992 - பாகிஸ்தான்

    1996 - இலங்கை

    1999 - ஆஸ்திரேலியா

    2003 - ஆஸ்திரேலியா

    2007 - ஆஸ்திரேலியா

    2011 - இந்தியா

    2015 - ஆஸ்திரேலியா

    2019 - ?

  6. முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து அணி

    இங்கிலாந்து அணி 5.4 ஓவர்களில் தனது முதல் விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் ராய் 20 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்

  7. பேட்டிங்கை தொடங்கியது இங்கிலாந்து அணி

    242 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கியுள்ள இங்கிலாந்து அணி முதல் ஓவரின் முடிவில் ஒரு ரன்னை அடித்துள்ளது

  8. இங்கிலாந்து அணி அதன் ஆக்ரோஷமான பேட்டிங்கிற்காக புகழப்பட்டது. ஆனால் தற்போது பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது என இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

  9. கடைசி பத்து ஓவர்களில் வெறும் 62 ரன்களை மட்டுமே நியூசிலாந்து அணி அடித்திருந்தது

  10. முதல் இன்னிங்ஸின் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.

  11. அரை சதம் எடுப்பார் என எதிர்பார்த்த நியூசிலாந்து அணியின் லேதம் 47 ரன்களில் அவுட் ஆகியுள்ளார்.

  12. ஆறு விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி

    கிராண்ட் ஹோம் 28 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வோக்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனார்.

  13. கடந்த ஐந்து ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்திருந்த நியூசிலாந்து அணி, 45 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்துள்ளது

  14. கிரிக்கெட் சூதாட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

    விளையாட்டில் சூதாட்டம் சட்டவிரோதமாக இருந்தாலும், இந்தியாவில் இது மிகவும் பிரபலமாக உள்ளது.

    இந்த நிழலுலக தொழில் 50 பில்லியன் டாலருக்கு அதிகமான மதிப்புடையது என நம்பப்படுகிறது. இந்த கிரிக்கெட் உலகக் கோப்பையில் சூதாட்டம் உச்சத்தை அடைந்துள்ளது.

    பத்தாண்டு காலமாக இந்த சூதாட்டத்தை நடத்தி வருகின்ற ஆர்யன், அநாமதேய இணைய அழைப்பு மூலம் இந்த சூதாட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கினார்.

  15. ப்ளன்கட் மீண்டும் அசத்தல்

    39ஆவது ஓவரில் அவுட் ஆகியுள்ளார் நீஷம். மூன்றாவது விக்கெட்டை எடுத்துள்ளார் இங்கிலாந்தின் ப்ளன்கட். லேதம் மற்றும் நீஷம் கூட்டு சேர்ந்து நன்றாக ஆடி வந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்துள்ளார் நீஷம்.

  16. 35 ஓவர்கள் முடிவில் 150 ரன்களை கடந்தது நியூசிலாந்து அணி. அந்த அணியின் நீஷம் மற்றும் லேதம் களத்தில் உள்ளனர். 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

  17. ரசிகர்களுக்கு தனது கையெழுத்தை வழங்குகிறார் பென் ஸ்டோக்ஸ்

  18. டெய்லர் அவுட் ஆனார்

    வுட் வீசிய பந்தில் டெய்லர் அவுட் ஆனார். அவர் 31 பந்துகளில் 15 ரன்களை எடுத்திருந்தார். நான்கு விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி 141 ரன்களை எடுத்துள்ளது.

  19. 30 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் டெய்லர் மற்றும் லாதம் களத்தில் உள்ளனர்.

  20. மூன்றாவது விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து

    அரை சதம் அடித்த நிக்கல்ஸ் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ப்ளன்கட் வீசிய பந்தில் அவுட் ஆனார்.