You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது இங்கிலாந்து அணி

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்தும், நியூசிலாந்தும், முதல் முறையாக இந்தக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் கனவோடு களமிறங்குகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இத்துடன் எங்களின் நேரலை முடிவடைந்தது. இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.

  2. உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ். தொடரின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்

  3. சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து

    சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்து அணியின் கப்டில் ரவுன் ஆவுட் ஆகி அது டையில் முடிந்தது. எனவே சூப்பர் ஓவர் டையில் முடிந்ததால் தங்களது இன்னிங்ஸிலும், சூப்பர் ஓவரிலும் அதிக பவுண்டரிகளை எடுத்த அணி இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

  4. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணியின் ஆர்சர் வீசிய பந்தில் கப்தில் அவுட் ஆனதுடன் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது.

  5. சூப்பர் ஓவரில் இரண்டாவதாக களமிறங்கியது நியூசிலாந்து அணி. அந்த அணியின் சார்பாக கப்டில் மற்றும் நீஷம் களமிறங்கினர்.

  6. சூப்பர் ஓவர்

    சூப்பர் ஓவரில் களமிறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் 15 ரன்களை எடுத்தனர். நியூசிலாந்து அணியின் போல்ட் பந்து வீசினார்.

  7. வரலாறு - டையில் முடிந்த உலகக் கோப்பை, சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்ற அணி தீர்மானிக்கப்படும்

    பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் போட்டி நுழைந்தது. அப்போது இங்கிலாந்து வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஆறு ரன்கள் கிடைத்தது.

    அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் ஓடிய நிலையில் ஓவர் துரோ மூலம் அந்த பந்து பவுண்டரி சென்றதால் இங்கிலாந்துக்கு அந்த பந்தில் மொத்தம் ஆறு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தில் ஒரு ரன் ஓடிய நிலையில் இரண்டாவது ரன் ஓடிய ரஷீத் ரன் அவுட் செய்யப்பட்டார்.

    கடைசி பந்தில் இங்கிலாந்துக்கு இரண்டு ரன் தேவைப்பட்டது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அந்நிலையில் ஒரு ரன் எடுத்த இங்கிலாந்து, இரண்டாவது ரன்னுக்கு முயன்றபோது வுட்ஸ் ரன் அவுட் செய்யப்பட்டார். எனவே இங்கிலாந்து கடைசியில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்தது.

  8. ஆறு விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி

    கிறிஸ் வோக்ஸ் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் பெர்குசன் வீசிய பந்தில் அவுட் ஆனார்.

  9. ஐந்து விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து

    அரை சதம் எடுத்தபின் அவுட் ஆனார் பட்லர். 45 ஓவர்கள் முடிவில் 196 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

  10. பட்லரை தொடர்ந்து ஸ்டோக்ஸும் அரை சதம் எடுத்தார். இங்கிலாந்து அணி 37 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க வேண்டும்.

  11. அரை சதம் அடித்தார் பட்லர்

    அரை சதம் எடுத்தார் பட்லர். 43.4 ஓவர்கள் முடிவில் 188 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

  12. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக செல்கிறதா ஆட்டம்?

  13. 40 ஓவர்கள் முடிவில் 170 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. 60 பந்துகளில் 72 ரன்கள் எடுக்க வேண்டும் அந்த அணி.

  14. இங்கிலாந்து அணி இலக்கை அடைய 6.98 ரன் விகிதம் தேவையாக உள்ள நிலையில் தற்போதைய ரன் விகிதம் 4.06ஆக உள்ளது

  15. இங்கிலாந்து அணி 89 பந்துகளில் 100 ரன்களை எடுக்க வேண்டும்.

  16. 35 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

  17. முப்பது ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்துள்ளது.

  18. ரோஹித் ஷர்மாவின் சாதனை

    வில்லியம்சன், ரூட் மற்றும் பேர்ஸ்டோ தங்களின் ஆட்டத்தை முடித்துள்ள நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெயரை தக்க வைத்துள்ளார் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா. அவர் இந்த தொடரில் அதிகபட்சமாக 648 ரன்களை அடித்துள்ளார். அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்நர் 647 ரன்களையும், வங்கதேச அணியை சேர்ந்த ஷகிப் அல் ஹாசன் 606 ரன்களையும் எடுத்துள்ளனர்.

  19. மோர்கன் வெளியேறினார்

    இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், நீஷம் வீசிய பந்தை தூக்கி அடித்தபோது கேச் கொடுத்து அவுட் ஆனார்.

  20. மூன்றாம் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து

    இங்கிலாந்து அணி 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ, பெர்குசன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.