இந்தியா - இலங்கை கிரிக்கெட்: ரோகித் வரலாற்று சாதனை, இந்தியா அபார வெற்றி
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தான் பங்கேற்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு அபார வெற்றிபெற்றுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
களமிறங்கியது இந்தியா, லசித் மலிங்காவை எதிர்கொள்ளும் கே.எல்.ராகுல், ரோஹித் இணை.
265 ரன் இலக்கோடு களமிறங்கியது இந்திய அணி. தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா இணை தங்கள் முதல் ஓவரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா பந்து வீச்சை எதிர்கொண்டது. இலங்கையைப் போல அல்லாமல் இவர்கள் இருவரும் முதல் ஓவரை நிதானமாக சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இந்தியாவுக்கு 265 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியா இலங்கை மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 50 ஓவர்களின் முடிவில் 264 ரன்கள் எடுத்த இலங்கை, இந்தியாவுக்கு 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் இறுதி லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலி்ல் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது.
அணியின் தலைவர் கருணாரத்னே 10 ரன்களும், குசால் பெரேரா 18 ரன்களும், ஃபெர்ணான்டொ 20 ரன்களும், குசால் மென்டிஸ் 3 ரன்களும் எடுத்திருந்தனர்.
பின்னர் விளையாடிய மேத்யூஸூம், திருமான்னவும் நிதானமாக விளையாடி 100 மேலான ரன்களை சேர்ந்து எடுத்தனர். இலங்கையின் ரன் குவிப்பு அதிகரிக்க இவர்கள் முக்கிய காரணமாக இருந்தனர்.
திருமான்ன அரை சதம் கடந்து வெளியேறிய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய மேத்யூஸ் சதம் கடந்து 128 பந்துகளை சந்தித்து 113 ரன்களை எடுத்தார்.
50 ஓவர்களின் முடிவில் 264 ரன்கள் எடுத்துள்ள இலங்கை, இந்தியாவுக்கு 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
முதல் நான்கு விக்கெட்டுகளை சாய்த்ததில் பெரும் பங்கு தோனிக்கு உள்ளது. விக்கெட் கீப்பராக அற்புதமான கேட்சுகளைப் பிடித்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், மென்டிஸ் விக்கெட்டை ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார்.
சிறப்பாக பந்து வீசிய பும்ரா மொத்தம் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பட மூலாதாரம், ISHARA S. KODIKARA / Getty Images
ஏழாவது விக்கெட்டை இழந்தது இலங்கை
திஸ்ரா பெரேரா 2 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் சிறந்த கேச் மூலம் வெளியேற்றப்பட்டார்.
113 ரன்களில் மேத்யூஸ் ஆட்டமிழந்தார்
128 பந்துகளில் 113 ரன்கள் எடுத்த மேத்யூஸ் பும்ரா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இலங்கை ஆறாவது விக்கெட்டை இழந்துள்ளது.
டிசில்வா 24 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
திஸ்ரா பெரேரா களமிறங்கி விளையாடி வருகிறார்.
பும்ரா இதுவரை மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பட மூலாதாரம், Clive Rose / Getty Images
சதம் அடித்தார் மேத்யூஸ்
மொத்தம் 115 பந்துகளை சந்தித்த மேத்யூஸ் சதம் அடித்தார். உடன் விளையாடும் டிசில்வா 11 ரன்கள் எடுத்துள்ளார்,
பட மூலாதாரம், Clive Rose / Getty Images
200 ரன்களை எட்டியது இலங்கை
40 ஓவர்கள் முடிவில் இலங்கை 200 ரன்களை எட்டியுள்ளது. ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேத்யூஸ் 85 ரன்களோடும், டிசில்வா 6 ரன்களோடும் விளையாடி வருகின்றனர்.
53 ரன்களில் வெளியேறினார் திருமான்ன
திருமான்ன 68 பந்துகளை சந்தித்து 53 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இலங்கை ஐந்தாவது விக்கெட்டை இழந்துள்ளது.
டிசில்வா இப்போது ஆட்டக்காரராக இறங்கியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
35 ஓவர்கள் முடிவில் இலங்கை 159 ரன்கள்
35 ஓவர்கள் முடிவில் இலங்கை நான்கு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்துள்ளது. நிதானமாக
ஆடிவரும் மேத்தியூஸ் அரை சதம் கடந்து 57ரன்களையும், திரிமான்ன 47 ரன்களை எடுத்து தொடர்ந்து
ஆடி வருகின்றனர்.
இந்த ஆட்டக்காரர்கள் இருவரும் சேர்ந்து 101 ரன்கள் எடுத்துள்ளனர்.
அரை சதம் கடந்தார் மேத்யூஸ்
இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ் மொத்தம் 76 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் கடந்துள்ளார். அவரோடு விளையாடும் திரிமான்ன 39 ரன்கள் எடுததJள்ளார்.
இது அவரது 41வது அரை சதமாகும். இந்தியாவுக்கு எதிராக விளையாடியதில் எடுக்கும் 11வது அரை சதமாகும்.
பட மூலாதாரம், Clive Rose / Getty Images
30வது ஓவர்களில் முடிவில் இலங்கை
30வது ஓவர்கள் முடிவில் இலங்கை ரன்களை எடுத்துள்ளது.
நிதானமாக ஆடிவரும் திரிமன்னேயும், மேத்தியூஸும் முறையே ரன்களை எடுத்து தொடர்ந்து ஆடி
வருகின்றனர்.
பட மூலாதாரம், CHRISTIAAN KOTZE
100 ரன்களை எட்டியது இலங்கை
24 ஓவர்கள் முடிவில் இலங்கை 100 ரன்களை எட்டியுள்ளது.
பட மூலாதாரம், PA
விரைவாக 100 விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் பும்ரா
இலங்கையின் தொடக்க
வீரரும் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான கருணாரத்னேவை 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா வீழ்த்தினார்.
இந்த விக்கெட்டை
எடுத்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை
வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் பும்ரா இடம்பிடித்துள்ளார்.
இந்த போட்டியில் இதுவரை பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
15வது ஓவர்கள் முடிவில் இலங்கை 62 ரன்கள்
15வது ஓவர்கள்
முடிவில் இலங்கை நான்கு விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்துள்ளது. திரிமான்ன 2 ரன்களையும், மேத்தியூஸ் 7 ரன்களையும் எடுத்து தொடர்ந்து ஆடி வருகின்றனர். ..
சரியும் இலங்கை - 4-வது விக்கெட் வீழ்ந்தது, மிளிரும் தோனி
மூன்றாவது விக்கெட் சாய்ந்தது, மென்டிஸ் விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா
11-வது ஓவரின் நான்காவது பந்தில் மென்டிஸ் விக்கெட்டை வீழ்த்தினார் ரவீந்திர ஜடேஜா. மென்டிஸ் கிரீசை விட்டு வெளியே வர, பந்தினை லாவகமாகப் பற்றிய விக்கெட் கீப்பர் தோனி ஸ்டம்ப்பிங் செய்தார். இலங்கை 54க்கு 3 விக்கெட் இழந்தது.
50 ரன்களை எட்டியது இலங்கை, 9 ஓவரில்
புவனேஷ்வர்குமார் வீசிய 9-வது ஓவரில் ஒரே ஒரு ரன் எடுத்து இலங்கை 50 ரன் இலக்கை எட்டியது. வெகு விரைவில் அது 50 ரன்களை எட்டியிருந்தாலும் இரண்டு தொடக்க வீரர்களையும் தொடக்கத்திலேயே இழந்து அது தடுமாறி வருகிறது.
மீண்டும் தாக்கினார் பும்ரா, இரண்டாவது விக்கெட்டை இழந்தது இலங்கை
அதிரடியாக ஆட்டத்தை தொடக்கிய இலங்கைக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியைத் தந்துள்ளார் பும்ரா. அவரது பந்து வீச்சில் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான பெரேரோ விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடிபட்டு அவுட்டானார். அப்போது இலங்கை 40 ரன் எடுத்திருந்தது.
போட்டியை காண குவிந்துள்ள தமிழர்கள்
ரிவ்யூவில் ஃபெர்ணான்டோ தலை தப்பியது
6-வது ஓவரில்பு ம்ரா வீசிய பந்தில் ஃபெர்ணான்டோ எல்.பி.டபிள்யூ அவுட் ஆனதாக அம்பயர் தீர்ப்பளித்தார். இலங்கை இதை மறு ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவர் அவுட் இல்லை என்பது தெரியவந்தது.
பும்ரா பந்துவீச்சில் முதல் விக்கெட்டை இழந்தது இலங்கை
மூன்று ஓவர்களில் பவுண்டரிகளாக விளாசி 17 ரன் எடுத்திருந்த இலங்கை அணி நான்காவது ஓவரில் பும்ரா பந்து வீச்சில் கருணாரத்னே விக்கெட்டை இழந்தது.