இந்தியா - இலங்கை கிரிக்கெட்: ரோகித் வரலாற்று சாதனை, இந்தியா அபார வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தான் பங்கேற்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு அபார வெற்றிபெற்றுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தியா அபார வெற்றி: புள்ளிகள் வரிசையில் முதலிடம்

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி லீக் போட்டியில் இலங்கையை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழத்தி, இந்தியா அபார வெற்றிபெற்றுள்ளது.

    43.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 265 ரன்களை இந்தியா எடுத்தது.

    265 ரன்கள் வெற்றி இலக்கோடு களமிறங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறந்த அடித்தளம் அமைத்தனர்.

    ரோகித் சர்மாக இந்த உலகக்கோப்பையில் ஐந்தாவது சதம் அடித்துள்ளார்.

    இதன் மூலம் ஒரே உலகக்கோப்பை போட்டி தொடரில் ஐந்து சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

    இந்தியா 189 ரன்கள் எடுத்திருந்தபோது 103 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்,

    இவரோடு பேட்டிங் செய்த ராகுலும் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். ராகுல் 118 பந்துகளை சந்தித்து 111 ரன்கள் எடுத்ததால். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ராகுலின் முதலாவது சதம் இதுவாகும்.

    மூன்றாவது ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 41 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுத்து கடைசி லரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ரிசாப் பந்த் நான்கு ரன்களே எடுத்தார். இறுதியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ஏழு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இலங்கை அணியின் மலிங்கா, கசுன் ரஜிதா மற்றும் இசுரு உதானா தலா ஒரு விக்கெட்டுகளை சாய்த்தனர்.

    முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதை தேர்வு செய்தது.

    தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது.

    அணியின் தலைவர் கருணாரத்னே 10 ரன்களும், குசால் பெரேரா 18 ரன்களும், ஃபெர்ணான்டொ 20 ரன்களும், குசால் மென்டிஸ் 3 ரன்களும் எடுத்திருந்தனர்.

    பின்னர் விளையாடிய மேத்யூஸூம், திருமான்னவும் நிதானமாக விளையாடி 100-க்கு மேலான ரன்களை சேர்ந்து எடுத்தனர். இலங்கையின் ரன் குவிப்பு அதிகரிக்க இவர்கள் முக்கிய காரணமாக இருந்தனர்.

    திருமான்ன அரை சதம் கடந்து வெளியேறிய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய மேத்யூஸ் சதம் கடந்து 128 பந்துகளை சந்தித்து 113 ரன்களை எடுத்தார்.

    50 ஓவர்களின் முடிவில் 264 ரன்கள் எடுத்த இலங்கை, இந்தியாவுக்கு 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    முதல் நான்கு விக்கெட்டுகளை சாய்த்ததில் பெரும் பங்கு தோனிக்கு உள்ளது.

    விக்கெட் கீப்பராக அற்புதமான கேட்சுகளைப் பிடித்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், மென்டிஸ் விக்கெட்டை ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார்.

    சிறப்பாக பந்து வீசிய பும்ரா மொத்தம் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவர் கருணாரத்னேவை வீழ்த்தியபோது, விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியில் பும்ரா இடம்பெற்றார்,

    புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்தியா வெற்றி பெற்றுள்ளதால், புள்ளிகளின் வரிசையில் தற்போது முதலிடம் பெற்றுள்ளது.

    விராட் கோலி

    பட மூலாதாரம், IAN KINGTON

  2. புள்ளிகள் வரிசையில் இந்தியா முதலிடம்

    இன்றைய போட்டியில் இந்தியா இலங்கையை வென்றுள்ளதால், 15 புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

    இன்று தென்னாப்பிரிக்காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெறும் போட்டியில், ஆஸ்திரேலியா 326 ரான்கள் எடுத்து வெற்றிபெற்றால் இந்த வரிசையில் மாற்றம் ஏற்பட்டு ஆஸ்திரேலியா முதலிடம் பெறலாம்.

    ஆஸ்திரேலியா தோல்வியுற்றால், இந்த வரிசையில் இந்தியாவின் இந்த முதலிடம் நிரந்தரமாகும். அதனால், நான்காவது இடம் பெறும் நியூசிலாந்தோடு அரையிறுதியில் மோதும்.

    புள்ளிகள் வரிசை
  3. சச்சின் பாராட்டு

    தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதம் அடித்து வரலாற்று படைத்த ரோகித் சர்மாவை பாராட்டிய சச்சின், ராகுலின் முதலாவது உலகக்கோப்பை சதத்தையும் பாராட்டி ட்விட்டர் பதிவிட்டு்ளளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. ரோகித் சர்மா, ராகுலை பாராட்டி சேவாக் ட்விட்டர் பதிவு

    இன்றைய போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா மற்றும் ராகுலை பாராட்டி வீரேந்தர் சேவாக் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு

    இந்திய இலங்கை இடையே நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்,

    உலகக்கோப்பை 2019ல் ரோகித் சர்மா ஐந்தாவது சதம் அடித்து சாதித்துள்ளார்.

    91 பந்துகளில் அவர் 102 ரன்கள் விளாசினார். அதில் 14 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்குகின்றன.

    ரோகித்

    பட மூலாதாரம், Gareth Copley / Getty Images

  6. இந்தியா அபார வெற்றி, ரோகித் சர்மா வரலாற்று சாதனை

    இந்தியா இலங்கை இடையே நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

    ஒரே உலகக்கோப்பையில் ஐந்து சதங்களை அடித்து, ரோகித் சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    தொடக்க ஆட்டக்காரர் ராகுலும் சதம் அடித்தார்.

    43.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்தியா 265 ரன்கள் எடுத்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

  7. நான்கு ரன்களில் வெளியேறினார் ரிசப் பந்த்

    நான்கு பந்துகள் சந்தித்து ஒரு பவுண்டரி அடித்து 4 ரன்கள் எடுத்த ரிசப் பந்த் LBW முறையில் வெளியேறினார்.

    ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளார்.

  8. ராகுலும் சதமடித்தார்

    தொடக்க ஆட்டகாரர் ராகுல் 109 பந்துகள் சந்தித்து சதம் அடித்தார்.

    முன்னதாக, ரோகித் சர்மா 103 ரன்கள் குவித்து, இந்த உலகக்கோப்பையில் 103 ரன்கள் எடுத்து வரலாறு படைத்தார்,

    ராகுல்

    பட மூலாதாரம், Gareth Copley

  9. ஆஸ்திரேலியாவுக்கு 326 வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா

    இன்று நடைறெ்று வரும் இன்னொரு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

    டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 325 ரன்களை எடுததுள்ளது.

    தென்னாப்பிரிக்க அணியின் தலைவர் டுபிளசிஸ் சதம் அடித்தார்.

    இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைவதோடு, இந்தியா இன்று விளையாடும் இலங்கையை வென்றால், புள்ளிபட்டியலில் இந்தியா முதலிடம் பெறும். அப்படியானால் நான்காவது இடத்திலுள்ள அணியோடு இந்தியா அரையிறுதியில் மோதும்.

    ஆஸ்திரேலியா

    பட மூலாதாரம், Robert Cianflone / Getty Images

  10. ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா

    94 பந்துகளை சந்தித்து 103 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

    இந்தியா 189 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

    கசுன் ரஜிதா பந்தில் ரோகித் ஆட்டமிழந்தார்.

    இந்திய அணியின் தலைவர் விராட் கோலி களமிறங்கியுள்ளார்.

  11. ஒரே உலகக்கோப்பையில் ஐந்தாவது சதம் - வரலாறு படைத்தார் ரோகித்

    உலகக்கோப்பை 2019ல் ரோகித் சர்மா ஐந்தாவது சதம் அடித்து சாதித்துள்ளார்.

    91 பந்துகளில் அவர் 102 ரன்கள் விளாசினார். அதில் 14 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்குகின்றன.

    அவருடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 76 ரன்கள் எடுத்துள்ளார்.

    ரோகித் சர்மா

    பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR / Getty Images

  12. தொடக்க வீரர்கள் இருவரும் அரை சதம் கடந்து சிறப்பான ஆட்டம்

    இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ராகுல் 23வது ஓவரின்போது அரைசதம் கடந்தார்.

    தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ராகுல்

    பட மூலாதாரம், LINDSEY PARNABY / Getty Images

  13. தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழந்து 241 ரன்கள்

    இன்று நடைறெ்று வரும் இன்னொரு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

    டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி 39 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்துள்ளது.

  14. 19வது ஓவரில் 100 ரன்கள் குவித்தது இந்தியா

    19.1 ஓவரில் இந்தியா 100 ரன்களை கடந்துள்ளது.

    ராகுல் - 38 ரன்கள் (4 பவுண்டரிகள்)

    ரோகித் சர்மா - 60 ரன்கள் (8 பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள்)

  15. அரை சதம் கடந்தார் ரோகித் சர்மா

    ரோகித் சர்மா 49 பந்துகளில் 52 ரன்களை எடுத்துள்ளார்.

    ரோகித் சர்மா

    பட மூலாதாரம், Gareth Copley / Getty Images

  16. 10 ஓவர்களில் இந்தியா 59 ரன்கள் குவிப்பு

    முதல் 10 ஓவர்களில் இந்தியா 59 ரன்களை குவித்துள்ளது.

    மைதானம்

    பட மூலாதாரம், Getty

  17. தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழந்து 146 ரன்கள்

    இன்று நடைறெ்று வரும் இன்னொரு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

    டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி 25 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுததுள்ளது.

    இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைவதோடு, இந்தியா இன்று விளையாடும் இலங்கையை வென்றால், புள்ளிபட்டியலில் இந்தியா முதலிடம் பெறும். அப்படியானால் நான்காவது இடத்திலுள்ள அணியோடு இந்தியா அரையிறுதியில் மோதும்.

    பந்து
  18. 50 ரன்களை கடந்தது இந்தியா

    ஏாழாவது ஒவரில் இந்தியா 50 ரன்களை கடந்துள்ளது. இந்த ஆறு ஒவர்களில் ராகுல் மூன்று பவுண்டரிகளையும், ரோகித் ஆறு பவுண்டரிகளையும் அடித்துளளனர்.

    41 பந்துகளில் 50 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    ராகுல் - 21 ரன்கள்

    ரோஹித் சர்மா - 29 ரன்கள்

    ரோகித் சர்மா

    பட மூலாதாரம், Stu Forster / Getty Images

  19. மலிங்கா ஓவரில் 3 பவுண்டரி

    மூன்றாவது ஓவரை வீச வந்தார் லசித் மலிங்கா. தமது முதல் ஓவரில் 2 ரன் மட்டுமே அவர் தந்த நிலையில், இந்த ஓவரின் முதல் பந்திலேயே அவரது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ராகுல். மூன்றாவது பந்தில் மீண்டும் அவர் ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி பந்தை விளையாடிய ரோஹித்தும் ஒரு பவுண்டரி எடுத்தாதர். மொத்தம் இந்த ஓவரில் இந்தியாவுக்கு 13 ரன்கள் வந்தன. மூன்று ஓவர் முடிவில் இலங்கை 27-0

  20. முதல் பவுன்டரி அடித்த ரோஹித்

    முதல் ஓவரின் பெரும் பகுதியை ராகுல் சந்தித்த நிலையில் இரண்டாவது ஓவரை வீச வந்தார் ரஜித. அவரது முதல் பந்தை எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா 2 ரன்கள் எடுத்தார். மூன்றாவது பந்தை மிக அழகாக பவுண்டரிக்கு அடித்தார் ரோஹித். அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்த நிலையில் ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி தமது பவுண்டரி கணக்கைத் தொடங்கினார் ராகுல். 2-வது ஓவர் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் - 14-0