அரை சதம் அடித்தார் கோலி
இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி அரை சதத்தை நிறைவு செய்துள்ளார்.
48 பந்துகளில் அவர் 50 ரன்களை அடித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட் உலக்கோப்பை தொடரின் ரவுண்ட் ராபின் சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது. இதுவரை விளையாடியுள்ள ஐந்து ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி அரை சதத்தை நிறைவு செய்துள்ளார்.
48 பந்துகளில் அவர் 50 ரன்களை அடித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இருபது ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இந்தியா 86 ரன்கள் எடுத்துள்ளது.
பல ஓவர்களுக்கு பிறகு ரஷீத் வீசிய இந்த ஓவரின் முதலாவது பந்தில் விராத் கோலி ஒரு பவுண்டரி விளாசினார்.
இந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட கோலிக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் எல்.பி.டபிள்யூ கேட்டனர். நடுவர் மறுக்கவே, மூன்றாவது நடுவருக்கு ஆப்கானிஸ்தான் அணி முறையிட்டது. அதில் கோலியின் பேட்டில் பந்து உரசிய பிறகே பேடில் பட்டது உறுதியானதால் அவுட் கொடுக்கப்படவில்லை.
பதினெட்டு ஓவர்களில் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 75 ரன்களை எடுத்துள்ளது.
ஜி. நைப் வீசிய இந்த ஓவரில் வெறும் இரண்டு ரன்களை மட்டுமே இந்தியா எடுத்தது.
17 ஓவர்களில் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் ரவிசங்கர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சை விளாச முடியாத இந்திய அணி வீரர்கள் நிதானமாக ஆட்டத்தை விளையாடி வருவதால் 4.29 ரன் ரேட்டை கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் வீரர் எம். நைப் வீசிய பதினைந்தாவது ஓவரின் இரண்டாவது பந்தை தூக்கி அடித்த இந்திய அணி வீரர் கே.எல். ராகுல் ஆப்கானிஸ்தான் வீரர் சசாயிடம் கேட்சாகி பெவிலியன் திரும்புனார்.
53 பந்துகளை எதிர்கொண்ட கே.எல். ராகுல் இரண்டு பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார்.
தற்போது 16 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
எம். நைப் வீசிய பதினோராவது ஓவரில் எட்டு ரன்களும், ஜி. நைப் வீசிய பன்னிரெண்டாவது ஓவரில் ஆறு ரன்களும், எம். நைப் வீசிய பதின் மூன்றாவது ஓவரில் நான்கு ரன்களும் இந்தியா எடுத்துள்ளது.
பத்து ஓவர்களின் முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 41 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முஜீபுர் ரகுமான் வீசிய ஒன்பதாவது ஓவரில் முதல் நான்கு பந்துகளில் இந்தியா ரன் எதுவும் எடுக்கவில்லை. ஐந்தாவது பந்தில் ராகுலும், கடைசி பந்தில் கோலியும் தலா ஒரு ரன் எடுத்தனர்.
முஜீபுர் ரகுமான் வீசிய ஏழாவது ஓவரில் இந்தியா வெறும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில், அஃப்தப் ஆலம் வீசிய எட்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் உள்பட 14 ரன்கள் எடுத்தார் விராட் கோலி.
இந்தியாவின் ஸ்கோர் 34 ரன்களாக உயர்ந்துள்ளது.
அஃப்தப் ஆலம் வீசிய ஆறாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் உள்பட ஒன்பது ரன்கள் எடுத்தார் ராகுல்.
ஆறாவது ஓவரின் முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 18 ரன்கள் எடுத்துள்ளது.
ஐந்தவாது ஓவரின் இரண்டாவது பந்தில் முஜீபுர் ரகுமான் பந்துவீச்சில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா.
ரோகித் சர்மா பத்து பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார்.
அடுத்ததாக இந்திய அணியின் தலைவர் கேப்டன் கோலி களம் இறங்குகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அஃப்தப் ஆலம் வீசிய நான்காவது ஓவரில் ராகுல் ரன்கள் எதையும் எடுக்கவில்லை.
ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கியுள்ளனர். முதல் ஓவரை முஜீபுர் ரகுமான் வீசினார்.
இரண்டு ஓவர்களின் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பு எதுவும் இன்றி ஆறு ரன்கள் எடுத்துள்ளது.
உலக்கோப்பை தொடரின் ரவுண்ட் ராபின் சுற்றில், சௌதாம்ப்டனில் இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு