ஐந்து ஓவர்களில் 16 ரன்கள்
ஐந்து ஓவர்களில் முடிவில், விக்கெட் ஏதும் இழப்பின்றி 16 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி எடுத்துள்ளது.
கிரிக்கெட் உலக்கோப்பை தொடரின் ரவுண்ட் ராபின் சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது. இதுவரை விளையாடியுள்ள ஐந்து ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான் தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஐந்து ஓவர்களில் முடிவில், விக்கெட் ஏதும் இழப்பின்றி 16 ரன்களை ஆப்கானிஸ்தான் அணி எடுத்துள்ளது.
மூன்றாவது ஓவரை வீசிய இந்திய வீரர் முகமது ஷமியின் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தானால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை.
மூன்று ஓவர்களில் முடிவில் விக்கெட் இழப்பின்றி ஆப்கானிஸ்தான் அணி ஆறு ரன்கள் எடுத்துள்ளது.
முகமது ஷமி வீசிய இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் வீரர் சசாய் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தாரா என்று காண்பதற்கு இந்திய அணி மூன்றாவது நடுவரிடம் முறையிட்டது. எனினும், மூன்றாவது நடுவர் அவுட் வழங்கவில்லை.
இதன் மூலம், நடுவரின் தீர்ப்பை மூன்றாவது நடுவரிடம் முறையிட்டு மறுபரிசீலனை செய்ய கோரும் இந்தியா டிஆர்எஸ் வாய்ப்பின் கைவசம் நிறைவடைந்துள்ளது.
இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணி இரண்டு ஓவர்களின் இறுதியில் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சகமாக கேப்டன் விராத் கோலி 67 ரன்களையும், கேதர் ஜாதவ் 52 ரன்களையும், கே.எல். ராகுல் 30 ரன்களையும் எடுத்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி வீரர் ரோகித் ஷர்மா ஒரே ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினார்.
பந்துவீச்சை பொறுத்தவரை, ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் நபி மற்றும் நைப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரஹ்மான், அலாம், ரஷீத் மற்றும் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ், ஜி. நைப்பிம் வீசிய 49 ஓவரின் நான்காவது பந்தில் கேட்சாகி வெளியேறினார்
68 பந்துகளை சந்தித்த ஜாதவ் 52 ரன்களை எடுத்திருந்தபோது அவுட்டானார்.
இந்திய அணி வீரர் முகமது ஷமி ஜி. நைப்பிம் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
இரண்டு பந்துகளை சந்தித்த ஷமி ஒரே ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்ததாக குல்தீப் யாதவ் களமிறங்கியுள்ளார்.
இந்திய வீரர் கேதர் ஜாதவ் 66 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் அலாம் வீசிய 48ஆவது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர் அலியிடம் கேட்சாகி வெளியேறினார்.
ஒன்பது பந்துகளை சந்தித்த பாண்டியா ஏழு ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார்.
அடுத்ததாக முகமது ஷமி களமிறங்கியுள்ளார்.
49 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.
47 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.
43 ரன்களுடன் ஜாதவும், ஒரு ரன்னுடன் பாண்டியாவும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் ரன் ரேட் 4.38ஆக உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷீத் கான் வீசிய 44ஆவது ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட இந்திய அணி வீரர் மகேந்திர சிங் தோனியை ஆப்கானிஸ்தானின் விக்கெட் கீப்பர் அலி ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்க செய்தார்.
52 பந்துகளை எதிர்கொண்ட தோனி மூன்று பவுண்டரிகளுடன் 28 ரன்களை அடித்திருந்தபோது அவுட்டானார்.
அடுத்ததாக ஹர்திக் பாண்டியா களமிறங்கியுள்ளார்.
45 ஓவர்களில் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது.
40 ஓவர்களில் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை மட்டுமே இந்திய எடுத்துள்ளது.
22 ரன்களுடன் தோனியும், 21 ரன்களுடன் ஜாதவும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் ரன் ரேட் 4.38ஆக உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் பந்துவீச்சை ரன்களாக மாற்ற முடியாமல் திணறி வரும் இந்திய அணியின் ரன் ரேட் 4.22ஆக உள்ளது.
37 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.
36 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 152 ரன்கள் எடுத்துள்ளது.
எட்டு ரன்களுடன் தோனியும், 12 ரன்களுடன் ஜாதவும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் ரன் ரேட் 4.22ஆக உள்ளது.
33 ஓவர்களின் முடிவில் இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே எடுத்து திணறி வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை பவுண்டரி மற்றும் சிக்சர் அடிப்பதற்கு இந்திய அணி வீரர்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்திய அணியின் ரன் ரேட் 4.33ஆக உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர் எம். நபி வீசிய 30ஆவது ஓவரை எதிர்கொண்ட இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி அடித்த பந்தை ரஹ்மத் ஷா பிடித்து அவரை ஆட்டமிழக்க செய்தார்.
63 பந்துகளை எதிர்கொண்ட கோலி ஐந்து பவுண்டரிகளுடன் 67 ரன்களை அடித்திருந்தபோது அவுட்டானார்.
அடுத்ததாக கேதர் ஜாதவ் களமிறங்கியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடன், சௌதாம்ப்டனில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி 30 ஓவர்களில் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்துள்ளது.
66 ரன்களுடன் விராத் கோலியும், 3 ரன்களுடன் தோனியும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் ரன் ரேட் 4.43ஆக உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஷா வீசிய 26ஆவது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட விஜய் சங்கர் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானதாக நடுவர் கூறியதை எதிர்த்து இந்தியா மூன்றாவது நடுவரிடம் முறையீடு செய்தது.
எனினும், மூன்றாவது நடுவரும் பந்து சரியாக பேடில் பட்டதை உறுதிசெய்ததால் 41 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த விஜய் சங்கர் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து, மகேந்திர சிங் தோனி களமிறங்கியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ரஹ்மத் வீசிய 24ஆவது ஓவரை எதிர்கொண்ட இந்தியா ஆறு ரன்களை எடுத்தது. இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் இந்திய அணி வீரர் விஜய் சங்கர் பவுண்டரி அடித்தார்.
இந்தியா அணியின் ரன் ரேட் 4.60ஆக உள்ளது.
களத்தில் 53 ரன்களுடன் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியும், 27 ரன்களுடன் விஜய் சங்கரும் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இந்த போட்டியில் இந்திய அணி 100 ரன்களை கடந்துள்ளது.
ரஹ்மத் வீசிய 22 ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட விஜய் சங்கர் அதை பவுண்டரியாக மாற்ற இந்திய அணியின் ஸ்கோர் 102 ரன்களாக உயர்ந்தது.