நாடாளுமன்ற தேர்தல் 2024: தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நாளை காலை ஏழு மணிக்குத் துவங்குகிறது. 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சத்தீஸ்கர்: 29 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது எப்படி? - காவல்துறை கூறுவது என்ன?

  2. தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடை கொடுத்தவர்கள் பெயரை பாஜக ஏன் வெளியிடவில்லை? – ராகுல் காந்தி கேள்வி

    தேர்தல் பத்திரம், பாஜக, ராகுல் காந்தி

    பட மூலாதாரம், ANI

    தேர்தல் பத்திரங்கள் மூலம் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர அரசு திட்டமிட்டிருந்தால், நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை பாஜக ஏன் வெளியிடவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.

    இன்று (புதன், ஏப்ரல் 17) உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்தத் தேர்தல் சித்தாந்தத்தின் தேர்தல். பாஜக அரசியல் சாசனத்தை அழிக்க நினைக்கிறது, இந்தியா கூட்டணி அதைப் பாதுகாக்க முயல்கிறது," என்றார்.

    “பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அனைவருக்குமான நலன்கள் ஆகியவை இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்னைகள். சில சமயங்களில் பிரதமர் மோதி கடலுக்கு அடியில் செல்கிறார், சில சமயங்களில் விமானத்தில் விண்ணுக்குச் செல்கிறார், ஆனால் அவரோ பாஜக-வோ இந்தப் பிரச்னைகளைப் பற்றி பேசுவதில்லை,” என்றார்.“சமீபத்தில், பிரதமர் மோடி ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டி முன்னரே எழுதி தயாரிக்கப்பட்டது, ஆனாலும் தோல்வியடைந்தது. வெளிப்படைத்தன்மைக்காக தேர்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோதி கூறுகிறார். இது உண்மையென்றால் பணம் கொடுத்தவர்களின் பெயர்களை ஏன் மறைக்க விரும்புகிறீர்கள்?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.

    “ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கிடைத்தால், அதற்கான பணத்தை பாஜக பெறுகிறது,” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். “ஒரு நிறுவனம் மீது அமலாக்கத் துறை, சிபிஐ நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு 10 அல்லது 15 நாட்களுக்குப் பிறகு அந்நிறுவனங்களிடமிருந்து பாஜக நன்கொடை பெறுகிறது,” என்றார் ராகுல் காந்தி.

    “இதுவே தெருவில் நடந்தால் அது ‘பணம் பறித்தல்’ என்று அழைக்கப்படுகிறது. பிரதமர் மோதி ஊழலின் தலைவர்,” என்றார்.

    அகிலேஷ் யாதவ், ‘பிடிஏ’ (அதாவது பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள்) பாஜகவை தோற்கடிக்கப் போகிறார்கள்‘ என்று கூறினார்.

  3. கோவை மக்களை சாதி ரீதியாக அணி திரட்டுவது சாத்தியமா? - பிபிசி கள ஆய்வு

  4. கொல்கத்தாவிடம் இருந்து 'நம்பமுடியாத' வகையில் வெற்றியைப் பறித்த பட்லர்

  5. ராமநாதபுரத்தில் பாஜகவினருக்கும் ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே மோதல்

    ராமநாதபுரத்தில் பாஜக-வினருக்கும் ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே மோதல்

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) பாஜக கூட்டணியில் பலாப்பழ சின்னத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். ஓபிஎஸ்-க்கு ஆதரவாக பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையிலான பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 16) மாலை ராமநாதபுரம் மாவட்டத்தின் ஆர்.எஸ்.மடை பகுதியில் ஓபிஎஸ் அணியின் ஒன்றிய செயலாளர் முத்து முருகன் தலைமையில் ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.ஆர்.எஸ்.மடையில் பிரசாரம் காலதாமதமானதனால் கோபமடைந்த ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முத்து முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது முத்து முருகன் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசனை தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் ஓபிஎஸ் அணியச் சேர்ந்த முத்து முருகன் மாவட்டத் தலைவர் தரணி முருகேசனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராமநாதபுரம் கேணிக்கரை சந்திப்பு பகுதியில் உள்ள பிரதான சாலையில் சாலை மறியல் செய்வதற்காக குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து சம்பவ இடத்துற்கு வந்த போலீசார் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த பாஜகவினர் முன்னாள் முதல் ஓபிஎஸ்-க்கு எதிராகவும் பலாப்பழச் சின்னத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.பின்னர் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த நியமன எம்பி தர்மர் பாஜக-வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபடாததால் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் மற்றும் எம்.பி. தர்மர் ஆகியோர் ராமநாதபுரம் மாடக்கொட்டன் பகுதியில் வீடு ஒன்றில் தங்கி உள்ள ஓபிஎஸ்-ஐ சந்தித்துப் பேசினர்.

  6. அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமா? அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ் இருவரின் இலக்கும் ஒன்றா?

  7. சிங்கப்பூருக்கு புதிய பிரதமர்

    லாரன்ஸ் வாங்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள லாரன்ஸ் வாங்

    சிங்கப்பூரின் புதிய பிரதமராக மே 15 தேதியன்று லாரன்ஸ் வாங் பதவியேற்பார் என சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    தற்போதைய பிரதமரான லீ சியன் லூங், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் வாங், சிங்கப்பூரின் துணை பிரதமராக கடந்த 2022ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

    சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் லீ குவான் உவின் மூத்த மகனும் நடப்பு பிரதமருமான லீ சியன் லூங், இந்த தருணத்தை சிங்கப்பூரின் தலைமையில் நிகழும் முக்கிய தருணம் என விவரித்துள்ளார்.

    "நான் பதவி விலகும் மே 15ஆம் தேதியன்று லாரன்ஸ் வாங் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்," என்று லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

    புதிய பிரதமராக பதவியேற்கும் வாங், கொரோனா காலத்தில் சிங்கப்பூரில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர். மேலும் இவர் சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் லீயின் தனிச் செயலராக 2005 முதல் 2008 வரை பொறுப்பு வகித்துள்ளார். அதையடுத்து கல்வி, தேசிய வளர்ச்சி, நிதித்துறை அமைச்சர் பதவிகளிலும் லாரன்ஸ் இருந்துள்ளார்.

  8. மத்திய கிழக்கில் நிகரற்ற ராணுவ சக்தியாக இஸ்ரேல் திகழ்வது எப்படி? இஸ்ரேலுக்கு ஆயுதம் தரும் நாடுகள் எவை?

  9. இஸ்ரேல் மீது இரான் தாக்குதல்: பதிலடி பற்றி விவாதிக்கக் கூடிய இஸ்ரேல் போர்க்குழு அமைச்சரவை

    இஸ்ரேல் மீது இரான் தாக்குதல்

    பட மூலாதாரம், Israeli government handout

    கடந்த சனிக்கிழமை அன்று (ஏப்ரல் 13) இரானின் இஸ்ரேல் மீது நடத்திய முன்னோடியில்லாத ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து விவாதிக்க இஸ்ரேலின் போர்க்குழு கூடியது.

    ஆனால் இந்தக் கூட்டத்தில் ஏதெனும் முடிவு எட்டப்பட்டதா என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.

    இரானின் தாக்குதலை இஸ்ரேலின் நட்பு நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. ஆனால் இந்தச் சூழ்நிலையை நிதானமாகக் கையாளுமாறு பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தை இஸ்ரேலின் நட்பு நாடுகள் வலியுறுத்தியிருக்கின்றன.

    இரான் ‘இந்த விஷயம் முடித்துவிட்டதாகக்’ கருதுவதாகக் கூறியுள்ளது. ஆனால் இஸ்ரேலிய ராணுவத்தின் தலைமை அதிகாரி, இரானின் தாக்குதலுக்கு கட்டாயம் பதிலளிக்கப்படும் என்று கூறினார்.

    “பல ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றை இஸ்ரேலுக்குள் ஏவப்பட்டிருக்கின்றன. இதற்கு பதில் தரப்படும்," என்று லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறினார்.

    ஆனால், அந்த பதிலடி என்ன, எப்போது அமையும் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

    இரான் - இஸ்ரேல்: எந்த நாட்டின் ராணுவம் வலிமையானது? இரான் தாக்குதலின் பின்னணி என்ன? முழு விவரம் இங்கே.

  10. கெஜ்ரிவாலின் விசாரணை தேதி நீட்டிப்பு – தேர்தல் தொடங்கிய பிறகும் சிறையில் இருப்பார்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    பட மூலாதாரம், ANI

    மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரைக் கைது செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு ஏப்ரல் 29-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதாவது தேர்தல் தொடங்கிய பிறகும் அரவிந்த் கெஜ்ரிவால் குறைந்தது பத்து நாட்கள் சிறையில் இருப்பார்.அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு மீது பதில் அளிக்க அமலாக்கத்துறை இயக்குனரகத்துக்கு உச்ச நீதிமன்றம் 2 வார கால அவகாசம் அளித்துள்ளது.அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, முன்கூட்டியே தேதியை வழங்குமாறும், வெள்ளிக்கிழமை விசாரணைக்குக் கோரினார்.ஏப்ரல் 19-ஆம் தேதி நாட்டில் வாக்குப்பதிவு தொடங்குகிறது என்று சிங்வி கூறினார்.ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கை ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு முன் விசாரிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.மேலும் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

  11. இரானுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் என்ன நடக்கும்? அமெரிக்காவும் போரில் இறங்குமா?

  12. ‘பதற்றத்தைத் தணியச்செய்ய வேண்டும்’ – டேவிட் கேமரன்

    இஸ்ரேல் மீது இரான் தாக்குதல், டேவிட் கேமரன்

    பட மூலாதாரம், EPA

    இங்கிலாந்தின் வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரன் இன்று (திங்கள், ஏப்ரல் 15) காலை செய்தியாளரகளைச் சந்தித்துவிட்டு, அரசாங்கத்தின் பிபிசி-யின் ரேடியோ 4 காலை நிகழ்ச்சியில் பேசினார்.

    இந்த இரண்டு நேர்காணல்களிலும் அவர்இஸ்ரேல் மீது இரான் நடத்திய தாக்குதல்கள் குறித்து பேசினார்.

    அவர், இந்த பதற்றமான சூழ்நிலையை தணியவைப்பதே முக்கியம் என்றார். மேலும் உயிரிழப்புகள், துயரம் அகியவற்றைத் தவிர்க்க இதைச் செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

    இரானின் தாக்குதல்களிலிடுந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்றார் கேமரூன். “ஆனால் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து தரும் அறிவுரை, பதிலடி கொடுக்க வேண்டாம் என்பதுதான்,” என்றார்.

    இந்தத் தாக்குதல் மூலம் இரான் ‘இரட்டை தோல்வி’ அடைந்திருப்பதாகச் சொன்னார். “ஏனெனில் இது இஸ்ரேலுக்கு சேதம் விளைவிக்கவில்லை. மேலும் இரான் அந்தப் பிராந்தியத்தில் மோசமான விளைகுகளை ஏற்படுத்துவது தெளிவகியிருக்கிறது,” என்றார்.

  13. கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன?

  14. நீலகிரி: ஆ.ராசா - எல்.முருகன் கடும் போட்டிக்கு நடுவே அதிமுக வேட்பாளருக்கு உற்சாகம் தருவது எது?

  15. நீலகிரி: ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை, நீலகிரி மாவட்டத்தில் ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை நடத்தினர்.

    ராகுல் காந்தி ஹெலிகாப்டர் சோதனை

    தேர்தல் பரப்புரைக்காக கேரள மாநிலம் வயநாடு செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு வந்த ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தாலூர் பகுதிக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார். ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    தாளூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இடையே உரையாற்றினார். பின்பு தனது சொந்த தொகுதியான கேரளா மாநிலம் வயநாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

    ராகுல் காந்தி வருகையை ஒட்டி தாளூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராகுல் காந்தியைக் காண சில கேரள எம் எல் ஏக்கள் வந்ததாக கூறப்படுகிறது அவர்களை கூட்ட அரங்கிற்கு காவல் துறையினர் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், அனுமதி மறுத்த காவல்துறையினரையும் கண்டித்து கேரளா எம் எல் ஏக்கள் மற்றும் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

  16. இஸ்ரேலை தாக்கியதால் மகிழ்ச்சி, பதிலடி குறித்த அச்சம் - இரானில் மக்கள் என்ன செய்கிறார்கள்?

  17. சௌதியில் மரண தண்டனை: ஓட்டுநரை காப்பாற்ற 40 நாளில் ரூ.34 கோடி 'குருதிப் பணம்' திரட்டிய கேரள மக்கள் - எப்படி?

  18. இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் – கச்சா எண்ணெய் விலை குறைந்தது

    இஸ்ரேல் மீது இரான் தாக்குதல்

    பட மூலாதாரம், Getty Images

    கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இன்று திங்கள்கிழமை (ஏப்ரல் 15) எண்ணெய் விலை குறைந்தது.

    ப்ரெண்ட் கச்சா எண்ணெய் - சர்வதேச அளவில் எண்ணெய் விலைகளுக்கான முக்கிய அளவுகோல் - திங்கட்கிழமை காலை ஒரு பீப்பாய் சுமார் 90அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7510) விற்பனை செய்யப்பட்டது.

    இஸ்ரேலுக்கு இரான் பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தது. கடந்த வாரம் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஆறு மாதத்தில் உச்ச விலையை நெருங்கியிருந்தது.

    இரான்-இஸ்ரேல் மோதல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பார்க்க சந்தைகள் எதிர்பார்க்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயை உலக நாடுகள் பெரிதும் நம்பியிருப்பதால், எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் உலகம் முழுவதும் சிற்றலை விளைவுகளை ஏற்படுத்தலாம். எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதால், உலகளவில் வாழ்க்கைச் செலவுகளும் உயர்ந்திருக்கின்றன.

    இரானின் தாக்குதலுக்கு இஸ்ரேலின் எதிர்வினை ஆற்றினால், வரும் வாரங்களில் உலகளாவிய சந்தைகளுக்கு அது முக்கியமான நிகழ்வாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    எரிசக்தி சந்தை நிபுணர் வந்தனா ஹரி, எண்ணெயின் விலை இப்போது குறைந்திருப்பது, ‘எண்ணெய் சந்தை இந்தக் கட்டத்தில் விநியோக அச்சுறுத்தல்களை பொருட்படுத்தும் அவசியத்தைக் கணக்கில் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது," என்றார்.

    அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, இரான் உலகின் ஏழாவது பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகும்.

    இஸ்ரேலை இரான் தாக்கியது ஏன்? எந்த நாடு வலிமையானது? முழுமையான விளக்கம் இங்கே.

  19. 'போரின் விளிம்பில் மத்திய கிழக்கு நிற்கிறது' - ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை

    இரான் இஸ்ரேல்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஐ.நா. பொதுச் செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ்

    இஸ்ரேல் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ், தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

    கடந்த சனிக்கிழமையன்று இரானால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலையடுத்து, ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஞாயிறன்று அவசரமாக கூடியது.

    இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஐநாவின் பொதுச் செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ், மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழல் குறித்து கவலை தெரிவித்தார்.

    "இந்த உலகம் மற்றுமொரு போரை தாங்காது. மத்திய கிழக்கு பிராந்தியம், போரின் விளிம்பில் நிற்கிறது. அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. உடனடியாக இந்த பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும். இது போரில் இருந்து விலகி நிற்பதற்கான தருணம்."

    மேலும் இரானால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக ஐநா பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

  20. 4 பந்துகளில் என்ன 'மாயம்' செய்தார் தோனி? – காணொளி