'ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' - நயினார் நாகேந்திரன்
நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
மெட்டாவில் தொழில்நுட்பக் கோளாறு: வாட்ஸப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிழப்பு

பட மூலாதாரம், Getty Images
‘மெட்டா’வில் நேற்று (புதன்கிழமை , ஏபர்ல் 3) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் சுமார் ஒரு மணி நேரம் செயலிழந்தன.ஆனால், தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.புதன்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில், உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்கள் இந்த மூன்று சமூக வலைதளங்களை உபயோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். இதைப் பற்றி பலரும் X தளத்தில் ட்வீட் செய்தனர்.இணையதளங்கள் மற்றும் செயலிகளில் ஏற்படும் சிக்கல்களைக் கண்காணிக்கும் தளமான டவுன் டிடெக்டரின் கூற்றுப்படி, 80,000-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் செயலி செயலிழந்ததாகக் கூறினர்.டவுன்டெக்டரின் கூற்றுப்படி, இந்தியாவில் சுமார் 3,500 பயனர்கள் மற்றும் பிரேசிலில் 7,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் சிக்கல் ஏற்பட்டதாகப் புகாரளித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து, X-இல் பதிவிட்ட வாட்ஸ்அப்பின் அதிகாரப்பூர்வ பக்கம், "செயலியில் சிலர் பிரச்சனைகளை எதிர்கொள்வது எங்களுக்குத் தெரியும். அதை விரைவில் சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம்," என்று கூறியுள்ளது.முன்னதாக, கடந்த மார்ச் மாதம், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மற்றும் ஃபேஸ்புக் ஆகிய அனைத்து தளங்களும் சுமார் இரண்டு மணி நேரம் செயலிழந்தன.
இந்த 2 தொகுதிகள்தான் திமுகவுக்கு அதிக சவாலாக இருக்கப் போகின்றனவா? - அப்படி என்ன சிக்கல்?
அதிமுக-வுக்கு பாமக துரோகம் செய்ததா? அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன?

பட மூலாதாரம், PMK
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தருமபுரியில் பரப்புரை மேற்கொண்டனர்.
அதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நாங்கள் துரோகம் செய்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். நாங்கள் யாருக்கு துரோகம் செய்தோம். உங்கள் இருவரையும் (திமுக, அதிமுக) மாறி மாறி உழைத்து முதலமைச்சராகத்தானே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு,” என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த 2019ஆம் ஆண்டில் கூட்டணியில் இணையும்போது 10 அம்ச கோரிக்கைகளைக் கொடுத்துதான் ராமதாஸ் கூட்டணியில் இணைந்தார் என்றும் அதில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகியவையும் அடக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதோடு, “கூட்டணியில் இணைந்ததே இட ஒதுக்கீடு பெறுவதற்காகத்தான். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதை வைத்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தினார். அவர் ஒரு வியாபாரி, அவருக்கு சமூக நீதியோ தமிழக மக்களின் முன்னேற்றமோ, எதைப் பற்றியும் கவலையில்லை.
அதற்குப் பிறகு அந்தச் சட்டம் அவசரகதியில் வந்தது. அது அரைகுறையாக இருந்ததால்தான் அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது,” என்று பேசினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
செருப்பு மாலை அணிந்து வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர் – ஏன் தெரியுமா?

விழுப்புரம் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள செருப்பு சின்னத்தை மாலையாகத் தனது கழுத்தில் அணிந்தவாறு பொது மக்களிடையே தனி ஆளாக வாக்கு சேகரித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட, உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அரசன் என்பவர் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் வரும்போதெல்லாம் சுயேச்சையாகப் போட்டியிடுவார். மேலும் அவருக்கு ஒதுக்கப்படும் சின்னத்தை வைத்து வித்தியாசமான முறையில் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு கேட்டு பிரசாரம் செய்வது அவரது வழக்கம்.
அந்த வகையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்த அவருக்கு செருப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை நகரம் முழுக்க வியாபாரிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரிடத்திலும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள செருப்பு சின்னத்தை மாலையாகக் கழுத்தில் அணிந்துகொண்டு கையில் செருப்புச் சின்னம் கொண்ட பதாகையை எடுத்துக் கொண்டு “செருப்பு எவ்வாறு நமக்கு உழைக்கின்றதோ அதேபோன்று நானும் உங்களுக்காக செருப்பாக உழைப்பேன்” என்றும் “கல்லு, முள்ளு, வெயில் உள்ளிட்டவற்றிடம் இருந்து உங்களைக் காக்கும் செருப்பைப் போன்று நான் உங்களைக் காப்பேன்” என்றும் கூறி வீதி வீதியாகச் சென்று பொதுமக்கள், வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சுயேச்சை வேட்பாளர் அரசன் பிபிசி தமிழிடம் பேசியபோது, விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு தொகுதிகளுக்குச் சென்று ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு நாள் தங்கியிருந்து வாக்கு சேகரிக்கப் போவதாகக் கூறினார். முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் இவர் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: பாஜகவுக்கு இந்தி மொழியில் பேசி பிரசாரம் செய்த அண்ணாமலை – என்ன நடந்தது?

கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றவாறு அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அவரோடு கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உடனிருந்தார்.
இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக வட இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் தெப்பக்குளம் மைதானத்தில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை இந்தி மொழியில் பேசி பிரசாரம் செய்தார். அப்போது வட இந்திய மக்களிடம் இந்தியில் உரையாற்றிய அண்ணாமலை, “அனைவரும் தயவுகூர்ந்து நினைவுகொள்ளுங்கள். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நமது தாமரை மலர தங்கள் அனைத்து குடும்பங்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நல்லதொரு இந்தியாவை கொண்டு வருவதற்கு நல்ல மனிதரான மோதியை கொண்டு வருவதற்கு கோவையில் உள்ள தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரின் வலுவையும் சேர்த்து தாமரைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்தார்.
கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெறும் வழி என்ன? நிபுணர்கள் விளக்கம்
ஆர்.சி.பி. அணியை சரித்த மயங்க் யாதவ் - 156 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் ரகசியம் என்ன?
‘கச்சத்தீவை மீட்பது இனி சாத்தியமில்லை’ – முன்னாள் இந்திய துணைத்தூதர் பேட்டி

கச்சத்தீவை மீட்பது இனி சாத்தியமில்லை என்றும், இந்தியா-இலங்கை ஆகிய இரு நாட்டின் எல்லைக்குள்ளும், மீனவர்கள் மீன்பிடிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மட்டுமே வாய்ப்பு உள்ளது என்றும் யாழ்பாணத்தின் முன்னாள் இந்திய துணைத்தூதர் நடராஜன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.50 வருடங்களுக்கு முன்பே கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்துவிட்டு, இப்போது திருப்பி வாங்க வேண்டும் என்பது சரியான முறையல்ல, என்றார் அவர். “அப்படிக் கேட்டாலும் இலங்கை அரசு கொடுக்காது,” என்றார்.மேலும், இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும், என்றார்.“இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் போது, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில், அவர்களது படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. எனவே இந்திய அரசு, இலங்கை அரசோடு பேசி, நமது மீனவர்கள் கச்சத்தீவு, நெடுந்தீவு போன்ற கடல் உணவு அதிகமாக உள்ள இடங்களில் மீன்பிடிக்கவும், அதே போல இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்கவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாலே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்,” என்றார்.மேலும், கச்சத்தீவு வழக்கைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் ‘அது முடிந்த போன கதை, அதைப்பற்றி யாரும் பேசக்கூடாது' என கூறியிருப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதில் என்ன பயன் இல்லை என்றும் தெரிவித்தார்.“கச்சத்தீவை அப்போதைய பிரதமர், இந்திரா காந்தி இலங்கைக்குக் கொடுத்தார். மாநில அரசு அந்த விவகாரத்தில் எதுவும் செய்திருக்க முடியாது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் முடிவு. இது நல்ல முடிவா, இல்லையா என்பதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு,” எனவும் தெரிவித்தார்.
கச்சத்தீவு: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இந்த '300 அடி நிலம்' ஏன் முக்கியம்? எளிய விளக்கத்தைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.
'6 பன்னீர்செல்வங்களின் ஆசீர்வாதத்தால் எனக்கு பலாப்பழம் சின்னம்' – பிரசாரத்தில் ஓபிஎஸ் பேச்சு

பட மூலாதாரம், Getty Images
தமிழகம் முழுவதிலும் இருந்து தேடி கண்டுபிடித்து அழைத்துவரப்பட்ட 6 பன்னீர்செல்வங்களின் ஆசீர்வாதத்தால் பலாப்பழம் சின்னம் தனக்கு கிடைத்துள்ளதாக என்று தேர்தல் பிரசாரத்தின் பொது பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.வரவிருக்கும் பொதுத்தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பாக சுயட்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்குப் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அதே தொகுதியில் அவருக்குப் போட்டியாக ‘ஓ பன்னீர்செல்வம்’ என்ற பெயரைக்கொண்ட வேறு சில வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அவர் நேற்று (செவ்வாய், ஏப்ரல் 2) மாலை பாண்டியூர், நயினார்கோவில், பெருங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது பேசியஅவர், ‘தமிழகத்தில் திடீரென ஏகப்பட்ட பன்னீர்செல்வங்கள் தோன்றியதால் தனக்கு குலுக்கல் முறையில் பலாப்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்.குழப்பம் விளைவிப்பதற்காகத் தேடிப்பிடித்து தேர்தலில் நிறுத்திய அனைத்து பன்னீர்செல்வங்களுக்கும் ‘ஒ’ இனிஷியல் கொண்டவர்கள், ஆனால் அதில் தனக்கு மட்டும்தான் உண்மையான ‘ஓ’ இனிஷியல் என நகைச்சுவையாகப் பேசினார்.மேலும், தமிழகம் முழுவதிலும் இருந்து தேடி அழைத்துவந்து 6 பன்னீர்செல்வங்களின் ஆசீர்வாதத்தால் தனக்கு இனிமையான பழமான பலாப்பழ சின்னம் கிடைத்துள்ளது, என்றும் அவர் பேசினார்.ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்-ஐ எதிர்க்கும் 5 பன்னீர்செல்வங்கள் யார்? இது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.
‘மோதி மீண்டும் பிரதமராக அமரும்போது வள்ளிக்கும்மி கலைக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்’ – கோவையில் அண்ணாமலை பேச்சு

நரேந்திர மோதி மீண்டும் பிரதமராக அமரும்போது மேற்குத் தமிழகத்தின் வள்ளிக்கும்மி கலை ‘பாரம்பரியான கலை’ என்பதற்கான உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும், என்றும், அப்படி வழங்கப்பட்டால் அரசு நிகழ்ச்சிகளில் வள்ளிக்கும்மி ஆட முடியும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரான பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று (செவ்வாய், ஏப்ரல் 2) மாலை கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் அக்கட்சியின் தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.அப்போது பேசிய அண்ணாமலை, “வள்ளிக்கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. சீவக சிந்தாமணியில் அதுபற்றிப் பேசப்பட்டுள்ளது,” என்றார்.மேலும், பிரதமர் மோதி மீண்டும் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளிக்கும்மிக்கு உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும், என்றார். இதன்மூலம் கொங்கு மண்டலத்தின் பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
வள்ளிக்கும்மி என்றால் என்ன? அது ஏன் சமீபத்தில் சர்ச்சையானது? தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.
அமெரிக்காவில் விபத்து: சிக்கிய 20 இந்திய மாலுமிகளும் இன்னும் வெளியேற முடியாதது ஏன்?
இட ஒதுக்கீடு முதல் அமலாக்கத் துறை வரை: மோதி ஆட்சியில் இந்தியா கண்ட 8 முக்கிய மாற்றங்கள்
ராமநாதபுரம் தொகுதியில் திடீரென இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட ஓபிஎஸ் - என்ன காரணம்?, ராமநாதபுரம் தொகுதியில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட ஓபிஎஸ் - என்ன காரணம்?

படக்குறிப்பு, இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட ஓ.பி.எஸ். ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். தன்னுடைய சின்னத்தை மறந்து இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். பரமக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தில் பிரசாரம் செய்த பொழுது தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தை மறந்து விட்டு ‘இரட்டை இலைக்கு’ வாக்கு கேட்டார் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் சட்டென்று சுதாரித்து “பலாப்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள். பழக்க தோஷத்தில் இரட்டை இலை என்று சொல்லிவிட்டேன்” என்று கூறினார்.
“இரட்டை இலையை மீட்பதற்காகவும், தொண்டர்களின் உரிமையை காக்கவும் தான் ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன், மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளேன். பல ஆண்டுகள் நாம் கட்டிக் காத்த இயக்கத்தின் சின்னத்தைக் கூட தொண்டர்களால் வெளியில் சொல்ல முடியவில்லை. நம் எதிரிகளுக்கு சரியான பாடம் புகட்ட பலாப்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.
ரோகித் - ஹர்திக் இடையே என்ன நடக்கிறது? மும்பை இந்தியன்ஸ் அணியில் என்ன பிரச்னை?
சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் பிரசாரம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு - வாக்குவாதம், சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் பிரசாரம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு - வாக்குவாதம்

படக்குறிப்பு, சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் பிரசாரம் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் பிரசாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மித்ராவயல் கிராமத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வாக்குகள் சேகரிக்க சென்றார். அப்போது கிராம மக்கள் அவருக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, கிராமத்தில் இருந்து உடனே வெளியேறுமாறு கோஷமிட்டனர்.
“தொகுதிக்கு எதுவும் செய்யாத நீங்கள் எதற்கு இங்கு வாக்கு சேகரிக்க வருகிறீர்கள்?” என்று கிராம மக்கள் கூறினார்கள். "திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை, தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை" என்பது போன்ற குற்றச்சாட்டுகளை அப்பகுதி மக்கள் முன்வைத்தனர்.
பெண்கள் சிலர் மதுக்கடைகளை மூட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அவர்களை சமாதானப்படுத்த முயன்ற காரைக்குடி எம்எல்ஏ மாங்குடியிடம், “மதுக்கடையை அகற்ற வேண்டும், எங்களுக்கு மருத்துவமனை வேண்டும்” என்று கூறி பெண்கள் வாக்குவாதம் செய்தனர். பெண் ஒருவர் அவரது காலில் விழுந்து மதுக்கடையை மூடச் சொல்லி கதறி கண்ணீர் விட்டு அழுதது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கச்சத்தீவு: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இந்த '300 அடி நிலம்' ஏன் முக்கியம்? எளிய விளக்கம்
கச்சத்தீவை திரும்பப் பெற இந்தியா பேச்சுவார்த்தையா? இலங்கை அமைச்சர் என்ன சொல்கிறார்?
அமெரிக்க கப்பல் விபத்து: ஒரு வாரமாகியும் இந்திய மாலுமிகள் 20 பேரும் வெளியேற முடியாதது ஏன்?
இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகு பதவி விலக நெருக்கடி - ஆயிரக்கணக்கானோர் திடீர் போராட்டம் ஏன்?
காணொளிக் குறிப்பு, இஸ்ரேலில் வெடித்தது போராட்டம் - பிரதமர் நெதன்யாகுவை பதவி விலகச் சொல்வது ஏன்? இஸ்ரேலின் ஆழமான அரசியல் பிளவுகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
கடந்த வருடம் அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அதிர்ச்சியும், அதனால் தேசிய ஒற்றுமையும் ஏற்பட்டதால், இந்த அரசியல் பிளவுகள் கொஞ்சம் கிடப்பில் போடப்பட்டன.
ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள் மீண்டும் இஸ்ரேலின் தெருக்களில் போராடத் துவங்கியுள்ளனர்.
இஸ்ரேல் காஸா மீது போர் நடத்திவருகிறது. இந்தப் பின்னணியில் நீண்டகாலமாக இஸ்ரேல் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகக்கோரி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை முடுக்கியுள்ளனர்.
