'ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' - நயினார் நாகேந்திரன்

நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. 'மீண்டும் மோதி ஆட்சி வந்தால் சமூகநீதிக்கு சவக்குழி' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    'மீண்டும் மோதி ஆட்சி வந்தால் சமூகநீதிக்கு சவக்குழி' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    விழுப்புரத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "இந்தியா ஆபத்தில் உள்ளது, இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்று பேசியுள்ளார்.

    "மீண்டும் மோதி ஆட்சிக்கு வந்தால் சமூகநீதிக்கு சவக்குழி" என்றும் அவர் தெரிவித்துள்ளார்‌.

    கடலூர் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு செயலாளர்களில் 3% கூட ஓபிசி பிரிவினர் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் பாஜகவிற்கு பாமக பல்லக்கு தூக்குகிறது என்றும் தாக்கிப் பேசியுள்ளார். இந்தியாவை பாதுகாக்க இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை உதவும் என்றும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பானை சின்னத்தில் ரவிக்குமார், கடலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஷ்னுபிரசாத் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

  2. சிவகங்கை தொகுதியில் முந்துவது யார்? வேட்பாளர்கள் பற்றி மக்கள் நினைப்பது என்ன? - பிபிசி கள நிலவரம்

  3. அமெரிக்கா மோதி அரசை எதிர்க்கிறதா? சிஏஏ, அரவிந்த் கேஜ்ரிவால் விவகாரங்களில் தலையிடுவது ஏன்?

  4. மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதி மரணம்: காவல்துறையின் தாக்குதல் காரணமா?

    மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதி மரணம்: காவல்துறையின் தாக்குதல் காரணமா?

    மதுரை யாகப்பா நகர் சக்திமாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேசனின் மகன் இட்லி கார்த்திக் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 3ஆம் தேதியன்று வழிப்பறி வழக்கு தொடர்பாக அவரை மதிச்சியம் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

    பின்னர் கார்த்திக்கை மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். நேற்றிரவு திடீரென கார்த்திக் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதி மரணம்: காவல்துறையின் தாக்குதல் காரணமா?

    அதைத் தொடர்ந்து அவர் இன்று அதிகாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக சிறைத்துறை சார்பில் கரிமேடு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே தனது மகன் உயிரிழப்புக்கு விசாரணையின்போது காவல்துறையினர் நடத்திய தாக்குதலே காரணம் என கார்த்திக்கின் தந்தை கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவறை பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கார்த்திக் குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை செய்யவுள்ளார்.

  5. காலநிலை நெருக்கடி: நாடாளுமன்ற தேர்தலில் வாழ்வாதாரம், பேரிடர் மேலாண்மையை முன்னிறுத்தும் மக்கள்

  6. ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம்; நீட் தேர்வு கட்டாயமல்ல - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

    பட மூலாதாரம், INC/X

    நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.

    டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் இந்த அறிக்கை ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    'நியாய் பத்ரா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையின் பொருள், நீதிக்கான அறிக்கை என்பதாகும்.

    இதில் 5 தலைப்பின் கீழ் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சமத்துவம் என்று ஐந்து பிரிவுகளை மையமாக வைத்து வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:

    • சந்தேகத்திற்கு உரிய தேர்தல் பத்திரம் குறித்து விசாரணை நடத்தப்படும்
    • மகாலட்சுமி திட்டம் மூலமாக ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் நிதி அளிக்கப்படும்
    • விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்
    • விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்
    • நீட் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி மாநிலங்கள் முடிவெடுக்க முடியும்
    • 100 நாள் வேலைத் திட்டத்தின் ஒருநாள் ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தபடும்
    • சமத்துவத்தை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்
    • பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு, அவை நிரந்தரமாக்கப்படும்
    • இடஒதுக்கீடு செய்யபடும் புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
    • பாஜக இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஜிஎஸ்டி 2.0 கொண்டு வரப்படும்.
    • மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகு பொதுப் பட்டியில் உள்ள சில பிரிவுகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வராது, பழைய முறையே தொடரும் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும்
  7. கச்சத்தீவை இந்தியாவுக்குத் தரும் எண்ணம் இல்லை: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

  8. தேர்தலுக்கு முன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் – எதிர்க்கட்சிகள் கண்டனம்

    தி கேரளா ஸ்டோரி திரைப்படம், கேரளா, பாஜக,

    பட மூலாதாரம், THE KERALA STORY

    அரசு சேனலான தூர்தர்ஷனில் சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இன்று (வெள்ளி, ஏப்ரல் 5) ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்பும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கேரள காங்கிரஸ் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதிய கடிதத்தில், "ஏப்ரல் 5-ஆம் தேதி தூர்தர்ஷனில் கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒளிபரப்பாகிறது என்று தெரியவந்துள்ளது. இந்த படம் நாட்டை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தும் சங்க் பரிவாரின் விஷம் நிறைந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் தாந்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "தி கேரளா ஸ்டோரியை தூர்தர்ஷனில் ஒளிபரப்பும் முடிவு சமூகப் பிளவை ஊக்குவிக்கும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது," என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும், "தேசிய செய்தி ஒளிபரப்புச் சேனல், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் பிரச்சார இயந்திரமாக மாறக்கூடாது.மேலும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டத்தை அதிகரிக்கும் திரைப்படத்தின் ஒளிபரப்பை ரத்து செய்ய வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி ஏ.ஏ.ரஹீம், “வெறுப்பரசியல் படமான கேரளா ஸ்டோரியை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதை நான் கண்டிக்கிறேன். தூர்தர்ஷனை வெறுப்பு தொழிற்சாலை ஆக்காதீர்கள். சமூகத்தை பிளவுபடுத்தும் வெறுப்பு பிரச்சார மையமாக தூர்தர்ஷனை மாற்றக்கூடாது,” என்று தெரிவித்திருக்கிறார்.

  9. தமிழக மீனவர்களின் நலனைக் காக்காத மோதி, தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்னையைப் பேசுகிறார் – ஜவாஹிருல்லா

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கச்சத்தீவு, நரேந்திர மோதி,

    ஆம்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா நேற்று (வியாழன், ஏப்ரல் 4) பிரசாரம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை காட்டாத பிரதமர் நரேந்திர மோதி, தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்னையைப் பற்றிப் பேசுவதாகத் தெரிவித்தார்.

    “கடந்த 2014மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ராமநாதபுரம் வந்த பிரதமர் மோதி தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பாஜக சார்பில் மீனவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தார். உதாரணமாக பாரம்பரிய மீனவர்கள் பழங்கொடியினராக கருதப்படுவார்கள் என்பது மிக முக்கியமான வாக்குறுதி. அது மட்டும் இல்லாமல் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு இல்லக்காவதை தடுத்து நிறுத்துவோம். அதிக மீன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க கருவிகள் வழங்கப்படும் என்றல்லாம் வாக்குறுதிகள் தந்தார்கள். ஆனால் இந்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட கடந்த 10 ஆண்டுகளில் பாஜக நிறைவேற்றவில்லை,” என்றார்.

    மேலும், பாஜக-வின் கடந்த பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்களுடைய 400 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றி இருக்கிறது. சுமார் 3,250 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், என்றார்.

    “அது மட்டும் இல்லாமல் மோதி ஆட்சிக்காலத்தில் தான் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு இலங்கை கடல் பகுதி என்று அவர்கள் சொல்லும் பகுதிக்கு வரக்கூடிய தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மட்டும் இல்லாமல் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, படகுகளை ஓட்டி வருபவர்களுக்குச் சிறை தண்டனை வழங்கப்படும் என்றல்லம் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்த போதெல்லாம் மோதி மௌனம் சாதித்தார்,” என்றார்.

    “குஜராத்தில் உள்ள மீனவர்களுக்கு பாதுகாக்க மோதி அரசு காட்டிய அக்கறையில் ஒரு விழுக்காடு கூட தமிழக மீனவர்களின் நலன்னை அக்கறை காட்டவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை,” என்றார்.

    மேலும் “இந்தச் சூழலில் தான் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியாவது வெற்றி பெறலாம் என்று பல்வேறு வகையான தந்திரங்களை பாஜக செய்கிறது. அதில் ஒன்றுதான் கச்சத்தீவு பிரச்னை,” என்றார்.

  10. கோவை தொகுதியில் உண்மையான போட்டி யாருக்கு இடையே? - மக்களும் வேட்பாளர்களும் கூறுவது என்ன? - பிபிசி கள ஆய்வு

  11. பூமியை கண்காணித்துக் கொண்டிருக்கும் ஏலியன்கள்: கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் கூறும் வழி

  12. வேலூர்: சுடுகாட்டிற்கு பாதை கோரும் கிராம மக்கள் – மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு

    வேலூர்: சுடுகாட்டிற்கு பாதை கோரும் கிராம மக்கள் – மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு

    வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா பொன்னை பாலேகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கோடவார்பள்ளி காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள பாலாற்றின் ஓரமாக ஒரு சுடுகாடு உள்ளது.

    இந்தக் கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு சுடுகாட்டுக் கொட்டகை மற்றும் ஈமச்சடங்கு மண்டபம் இல்லாத நிலை தொடர்ந்து வருகிறது.

    சுடுகாட்டிற்கு இறந்தவர்களை எடுத்துச் செல்ல அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தின் வழியாகச் சென்றுதான் உடல்களை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அவ்வழியாகச் சென்றால் அவர்களுக்கும் கிராம மக்களுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

    மேலும் அப்பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இது குறித்து தனியார் நில உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பாதை வசதி அமைக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஆனால் சுற்றியுள்ள மற்ற கிராமங்களில் இருந்து இறந்த உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பாதை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதனால் வருகின்ற மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என கோடவார்பள்ளி காலனி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  13. வாட்ஜ் பேங்க்: கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியா பெற்ற 6,500ச.கி.மீ நிலப்பகுதியில் என்ன இருக்கிறது?

  14. 'ராகுல் காந்தி டெல்லியில் கட்டிப்பிடிக்கிறார், கேரளாவில் கையேந்துகிறார்' - ஸ்மிருதி இரானி

    “ராகுல் காந்தி டெல்லியில் கட்டிப்பிடிக்கிறார், கேரளாவில் கையேந்துகிறார்”, ஸ்மிருதி இரானி விமர்சனம்.

    பட மூலாதாரம், SmritiZIrani/X

    கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜகவின் ஸ்மிருதி இரானி, மறுநாள் வியாழன் அன்று வயநாடு பாஜக வேட்பாளர் சுரேந்திரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வயநாடு வந்தார்.

    கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்மிருதி இரானி. காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை தோற்கடித்து அவர் வெற்றி பெற்றார்.

    வயநாட்டில் பேசிய ஸ்மிருதி இரானி, “ராகுல் காந்தி வாக்குக்காக டெல்லியில் கட்டிப்பிடிக்கிறார், இங்கே கையேந்துகிறார். இதுதான் அவரின் அரசியல்” என விமர்சித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், “நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் வேட்புமனுத் தாக்கல் கூட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சியின் கொடிகளை மறைத்து வைத்தார்கள். ஒன்று முஸ்லீம் லீக்கின் ஆதரவு ராகுல் காந்திக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது அல்லது வட இந்தியாவுக்கு வந்து கோயில்களுக்குச் செல்லும்போது முஸ்லிம் லீக்- காங்கிரஸ் கூட்டணி குறித்து இனி மக்களிடம் மறைக்க முடியாது என்பதால் இருக்கலாம்.

    வயநாட்டிற்கு வந்த பிறகுதான் ஒன்று தெரிகிறது, தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆதரவு ராகுல் காந்திக்கு இருக்கிறது” என்று கூறினார்.

    இந்திய கூட்டணி குறித்துப் பேசிய அவர், "டெல்லியில் பேரணி நடக்கும் போது கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையாக ஒன்றாக இருக்கின்றனர். ஆனால் வயநாடு தொகுதியில் அவர்களுக்குள் போட்டி போடுகின்றனர், ஏன் இப்படி?” எனக் கேள்வி எழுப்பினார்.

  15. “தமிழக தேர்தல் களத்தில் பாஜக போட்டியிலேயே இல்லை” - காயத்ரி ரகுராம்

    “தமிழக தேர்தல் களத்தில் பாஜக போட்டியிலேயே இல்லை”  - காயத்ரி ரகுராம்

    பட மூலாதாரம், PuthiyaTamilagam/X

    தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தென்காசி மாவட்டம் சுரண்டையில் நடிகை காயத்ரி ரகுராம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்திற்கு பிரதமர் மோதி வரும்போது தமிழகத்திற்கான வளர்ச்சியும், உரிமையும் கொண்டு வந்தது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எனப் புகழாரம் சூட்டி வருகிறார். இதன் காரணமாக பாஜக-வுக்கு வாக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.

    ஜெயலலிதா மோதியா? - லேடியா? என்ற கேள்வியை எழுப்பினார். ஆனால் தற்போது மோதியை துண்டு பீடி அளவிற்குக்கூட எடப்பாடி பழனிச்சாமி நினைத்துப் பார்ப்பதில்லை” எனக் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், “மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதன் காரணமாக அதிமுகவிற்கு பொதுமக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. அதிமுகவுக்கும், திமுக-வுக்கும் இடையேதான் போட்டி. தமிழகத்தில் பாஜக என்ற கட்சி போட்டியில் இல்லை,” எனத் தெரிவித்தார்.

  16. ‘சிகரெட்டால் சூடு வைத்தனர், எரியும் கட்டையால் அடித்தனர்’ – டங்கி பாதையில் ரஷ்யா சென்ற இளைஞர்கள் அனுபவித்த கொடூரம்

  17. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் வெற்றி பெறும்? ஆனந்த் ஸ்ரீநிவாஸன் கணிப்பது என்ன?

  18. 'உன்னுடையது போலீஸ் ட்ரெய்னிங், நான் எடுத்து இருப்பது போராளி ட்ரெய்னிங்'

    சீமான்

    பட மூலாதாரம், SEEMAN/X

    தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்செல்வியை ஆதரித்து சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

    "தேர்தலில் நிறுத்த ஆள் இருக்கிறார்களா என்ற கேள்வியை எங்களிடம் அண்ணாமலை கேட்டார். தமிழ்நாட்டில் எங்கள் கட்சி 40 இடங்களிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்தியாவிலேயே மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அடுத்து கூட்டணி இல்லாமல் வேட்பாளர்களை நிறுத்தியது நாங்கள் தான், என்றார்.

    கச்சத்தீவு விவகாரத்தை கையிலெடுத்துள்ள பாஜக அரசு, தமிழ்நாட்டு மீனவர்கள் சுடப்பட்ட போது தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவத்தை வைத்து என்ன நடவடிக்கையை எடுத்தது என சீமான் கேள்வி எழுப்பினார்.

    "தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசிய சீமான், தம்பி அண்ணாமலை, நீ எடுத்து இருக்கிறது வெறும் போலீஸ் ட்ரெய்னிங், ஆனால் நான் எடுத்திருப்பது போராளி ட்ரெயினிங். உனக்கு ஓட்டுக் கேட்டு பிரதமர் வருவார். ஆனால் எனக்கு ஓட்டுக் கேட்க நான் தான் வருவேன்," என்று கூறினார்.

  19. பிரச்னைகளை திசைதிருப்பவே பா.ஜ.க கச்சத்தீவை கையிலெடுத்திருக்கிறது - முத்தரசன்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்
    படக்குறிப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 3) செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, கச்சத்தீவை மீட்க பிரதமர் நரேந்திர மோதி கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, குறைந்தபட்சம் இதுதொடர்பாக ஒரு கடிதம் கூட அவர் இலங்கை அரசுக்கு எழுதவில்லை என இலங்கை அமைச்சரே தெரிவித்திருக்கிறார், என்றார்.“தற்போது பா.ஜ.க-வுக்கு எதிரான பிரச்னைகளை திசை திருப்பவே கச்சத்தீவு குறித்து பா.ஜ.க-வினர் பேசுகின்றனர்,” என்றார்.மேலும் பேசிய அவர், கடந்த 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக 31% வாக்குகள் மட்டுமே பெற்று ஆட்சியை கைப்பற்றியது, என்றார். “அவர்களுக்கு எதிராக 69% வாக்குகள் பெற்ற கட்சிகள் பிளவுப்பட்டு அந்தத் தேர்தலை சந்தித்தன. ஆனால், அந்தக் கட்சிகள் தற்போது இந்திய கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. பிரதமரின் 400 இடங்களை வெற்றி என்கிற கனவு தற்போது சரிந்து வருகிறது,” என்றார்.மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகளான கருப்புப் பணத்தை மீட்பது, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயம், எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவது என எதையும் நிறைவேற்றவில்லை, என்றார். “அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை, வருவமானவரித்துறை, சி.பி.ஐ ஆகியற்றை மத்திய அரசு தனது உத்தரவுக்காக காக்கவைத்திருக்கும் நிலைதான் கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது,” என்றார்.அதிமுக பற்றிப் பேசிய அவர், தேர்தல் பிரசாரங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பா.ஜ.க-வை விமர்சனம் செய்வதை தவிர்த்து வருகிறார், என்றார். “அதிமுகவின் இந்த நடவடிக்கையை மக்கள் ஏற்கமாட்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது கட்சி தொடங்கிய காலத்தில் அவர் அளித்த உறுதிகளை மக்கள் மறந்துவிட்டனர் என அவர் கருதுகிறார். மக்கள் எதையும் மறக்கவில்லை. சமூகநீதி பேசுகிற அவர், சமூகநீதிக்கு எதிரான, இடஒதுக்கீட்டு கொள்கையை ஏற்காத பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

  20. மு.க.ஸ்டாலினுக்கு இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம் தெரியவில்லை: ராமதாஸ்

    பா.ம.க, பா.ஜ.க, ராமதாஸ்

    பட மூலாதாரம், ANNAMALAI/FACEBOOK

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று (புதன்கிழமை ஏப்ரல் 3) மாலை வாக்கு சேகரித்து உரையாற்றினார் சேகரித்து உரையாற்றினார்.

    அப்போது அவர், தருமபுரி பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணியை சேர்த்து இந்தியா முழுவதும் 401 மக்களவை உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாரத பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறை பொறுப்பேற்பார் என்றார்.

    மேலும், பலமுறை பா.ம.க, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துள்ளது, என்றும் சமூக நீதி தங்களுடைய உயிர் மூச்சு என்றும் கூறினார். “வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலும் சரி, மோதி பிரதமராக இருக்கும் காலத்திலும் சரி எங்களது சமூக நீதிக் கொள்கையை விட்டு தர மாட்டோம்,” என்றார்.

    “சென்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைத்ததே 10.5% உள் ஒதுக்கீடுக்காகத்தான். ஆனால் அரைகுறையாக கடைசி நேரத்தில் இட ஒதுக்கீடு கொடுத்ததால் தான் சென்னை உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்தது,” என்றார்.

    மேலும், “கருணாநிதி முதலமைச்சராக இருந்திருந்தால் வன்னியருக்கு தனி இட ஒதுக்கீட்டை கொண்டு வந்திருப்பார். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு குறித்த முக்கியத்துவம் தெரியவில்லை,” என்றார்.

    10.5% வன்னியர் இட ஒதுக்கீடு தந்த அதிமுகவை விடுத்து பாஜகவுடன் பாமக சேர்ந்தது ஏன்? பின்னணி என்ன? தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.